மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார் சுசாந்த்சிங்: காதலி வாக்குமூலம்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Was Living,Sushant Rajput, Left On June 8, Rhea Chakraborty To Court

மும்பை: பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மிகுந்த மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்தார் என அவரது காதலி ரியா சக்கரபர்த்தி உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுசாந்த்சிங் ராஜ்புத் 34, கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். சுசாந்த்சிங் தற்கொலை குறித்து மும்பை பந்த்ரா போலீசார் இதுவரை 40 சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.


latest tamil news



இந்நிலையில் இந்த வழக்கில் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை , சுசாந்த்சிங்கின் காதலி ரியா சக்கரபர்த்தி மீது பீஹார் மாநிலம் பாட்னா போலீசில் வழக்கு தொடர கோரி புகார் மனு கொடுத்தார். இதையடுத்து தன் மீது பாட்னா போலீசார் பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

இன்று நடந்த விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் ரியா சக்கரபர்த்தி மனு மூலம் அளித்த வாக்குமூலம், நானும் சுசாந்த்சிங்கும் கடந்த ஒருவருடமாக ஒன்றாக வாழ்ந்தோம். ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்வதற்கு 6 நாட்களுக்கு முன் ஜூன் 8-ம் தேதியன்று தான் அவரிடம் பிரிந்து வந்தேன். அவருடன் வாழ்ந்த காலத்தில் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
31-ஜூலை-202000:29:27 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam காதலி என்றால், காதலனின் நிலைமை தெரிந்தவர். அவருக்கு வேண்டியவற்றைச் செய்தாரா? வைத்தியரின் உதவியை நாடினாரா? காதலனின் உறவினருக்கு அறிவித்தாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X