ரிங் ரோடு அகலமாகிறது; இனி, நெரிசல் குறையும்

Added : ஜூலை 30, 2020 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் நகரின் முக்கியமான இரண்டு ரிங் ரோடுகள் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.திருப்பூர் நகரில் வாகன போக்குவரத்து மிக அதிகளவில் உள்ளது. இதனால், போக்குவரத்து நெருக்கடி நகரின் முக்கிய ரோடுகளில் அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, ரிங் ரோடு அமைக்கப்பட்டது.பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவிலிருந்து பலவஞ்சிபாளையம் வழியாக தாராபுரம் ரோட்டைச்
 ரிங் ரோடு அகலமாகிறது; இனி, நெரிசல் குறையும்

திருப்பூர்:திருப்பூர் நகரின் முக்கியமான இரண்டு ரிங் ரோடுகள் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.திருப்பூர் நகரில் வாகன போக்குவரத்து மிக அதிகளவில் உள்ளது. இதனால், போக்குவரத்து நெருக்கடி நகரின் முக்கிய ரோடுகளில் அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, ரிங் ரோடு அமைக்கப்பட்டது.பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவிலிருந்து பலவஞ்சிபாளையம் வழியாக தாராபுரம் ரோட்டைச் சென்றடையும் வகையில் உள்ள ரோடு இந்த இரு பகுதிகளையும் இணைக்கிறது. அதேபோல், காங்கயம் ரோட்டில் நல்லுாரிலிருந்து தாராபுரம் ரோட்டில் கோவில்வழியில் இணையும் ரிங் ரோடு உள்ளது.நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு ரோட்டிலும், தற்போது அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இவற்றில் மூன்று பிரிவாக பணிகள் எடுக்கப்பட்டு தற்போது முதல் கட்டப்பணி நடந்து வருகிறது. இதற்காக, ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X