இரு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி: சிதம்பரம்

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (80)
Share
Advertisement
P Chidambaram, finance minister, Congress, சிதம்பரம், காங்கிரஸ்

புதுடில்லி: முக்கிய துறைகளான தொலைதொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்து துறைகள், தற்போது பெரும் நெருக்கடியில் உள்ளன என காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: 2019- 2020 ஆண்டுகளில் 14 கோடி பேர் வேலை, வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போதாது என, தற்போது தொலைதொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய இரண்டு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தொலை தொடர்பு துறையில், ஒரு பெரிய நிறுவனம் விரைவில் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறையில், மூன்று பெரிய தனியார் நிறுவனங்களும், ஏர் இந்தியாவைப் போல் பயணிகளும் இல்லாமல், பணமும் இல்லாமல் முடங்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.


latest tamil newsஇந்த இரு முக்கிய துறைகளும் முடங்கினால், ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்து விடும் . இதையெல்லாம் பார்த்துக்கொண்டு, மோடி அரசு செயலிழந்து நிற்கிறது. மோடி அரசின் பொருளாதார மேலாண்மை, முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என நான் பல நாட்களாகச் சொல்லிவருகிறேன்.

மோடி அரசிடம் திட்டமும் இல்லை. தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை. திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை. இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - Lemuria,இந்தியா
02-ஆக-202020:02:47 IST Report Abuse
Raman உலகம் முழுதும் இதே நிலை தான் . சிதம்பரம் அய்யாவிடம் தீர்வு இருந்தால் அதை அமல்படுத்த அமேரிக்கா தயாராக இருக்கிறது . பல ஏரோபிளானெ செய்து விற்க முடியாமல் திணறி வருகிறார்கள்
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
02-ஆக-202018:46:27 IST Report Abuse
madhavan rajan It is happy news tha PC was able to find critical situation only in two ministries. During UPA rule 10 to 15 ministries faced critical situation.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
02-ஆக-202006:14:21 IST Report Abuse
 Muruga Vel பிரதமரை சந்தித்து உருப்படியான திட்டம் ஏதாவது இருந்தா சொல்லுங்க ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X