பொது செய்தி

இந்தியா

ஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம்: இஸ்ரோ தலைவர்

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க அனுமதிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை தெரிவித்தார். இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி துவங்கி உள்ளது. தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது

புதுடில்லி: விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க அனுமதிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை தெரிவித்தார்.



latest tamil news



இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி துவங்கி உள்ளது. தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது சொந்த ஏவுகணைதள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும். ராக்கெட் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகைள் வழங்கப்படும். ஏற்கனவே இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரி கோட்டாவில் இரண்டுஏவுகணை தளங்கள் உள்ளன.

தனியார் நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தால், அவர்கள் அதற்காக இஸ்ரோவின் சொத்துக்களை பயன்படுத்திகொள்ள விண்ணப்பிக்கலாம். தனியார் துறையின் தேவைகளின் அடிப்படையில் விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான செயல்முறையை துவங்க விரும்புகிறோம். இதன் மூலம் அவர்களின் தேவைகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.


latest tamil news





இந்தாண்டு சாத்தியமில்லை



இஸ்ரோவின் மையங்களில் ஒன்றான திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயற்கைகோள் ஏவுதல் மேற்கொள்வது கடினம். அடுத்து வரும் மாதங்களில் நிலைமையை பொறுத்து செயற்கைகோள்கள் ஏவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJI NATESAN - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
31-ஜூலை-202019:54:01 IST Report Abuse
RAJI NATESAN பார்த்து அவன் இலக்கை இந்தியா நோக்கி அமைத்து விடப்போகிறான்
Rate this:
Cancel
Indian - Vellore,இந்தியா
31-ஜூலை-202016:56:45 IST Report Abuse
Indian போர போக்கை பார்த்தல் ஆட்சியையும் தனியாருக்கு விற்று விடுவார்கள் போல இருக்கு,
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
31-ஜூலை-202012:37:54 IST Report Abuse
Nagarajan D அந்த ஏவத்தலத்திலிருந்து அந்த பப்பு காந்தி அவன் குடும்பம் ராமசாமி கூட்டத்தை சேர்ந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களனைவரையும் ஒரே ராக்கெட்டில் வைத்து ஏவி விடுங்கள் அவர்கள் எங்கேயாவது போய் தொலைக்கட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X