பாதுகாப்பாக வாழ பஞ்சபூதங்களை பாழாக்காதீங்க

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
என்பார்வை, பஞ்சபூதங்கள், உலக வெப்பமயமாதல்

'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ்வைந்து''
இந்த குறளில் நோயின்மை, செல்வம், விளைவு, மகிழ்ச்சி, காவல் என்ற ஐந்தும் பெற்றிருத்தல் நாட்டுக்கு அழகு என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

சுகமாக வாழ்தலுக்கும், இயற்கை சுற்றுச் சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தக்காலத்தில் மின்சாரம், அலைபேசி இல்லாமலும், தொலைத் தொடர்பு இல்லாதிருந்ததாலும் நோய் நொடிகள், வைரஸ்கள், கிருமிகள் மனிதனை தாக்கவில்லை.

இந்தப் பிரபஞ்சமானது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது. இவை இல்லையெனில் இவ்வுலகில் எந்த உயிரினமும் வாழ இயலாது. வளர்ச்சி, பொருளாதாரம் என்ற பெயரில் அனைத்து நாடுகளும் ஐம்பூதங்களையும் மாசுபடுத்தி, சுற்றுச்சூழலை கெடுத்து அழித்துவிட்டு, தான் மட்டும் வளரலாம் என்று பேராசை கொள்கின்றன.


மனிதனுக்காக மட்டும் அல்ல


இவ்வுலகம் மனிதனுக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல. புல், பூண்டு, தாவரம், மரம், நுண்ணுயிர்கள், வைரஸ்கள், பறவைகள், விலங்கினங்கள் என பல்லுயிர்களுக்கும் சேர்ந்தே படைக்கப்பட்டது.

ஆனால், மனிதன் தான் மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணி மற்ற பல்லுயிர்களை வேட்டையாடி அழித்து ஒழிக்க நினைக்கிறான்.இதனால் உலகின் உணவுச் சங்கிலி அறுக்கப்பட்டு, ஒன்றையொன்று மோதி வல்லவன் வாழ்கிறான்.

அடுத்த நுாறு ஆண்டுகளில் உலகை கடும் வெப்பம் தாக்கும். கடல் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதம் ஏற்படும். மக்கள் பாதிக்கப்படுவர் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.அடுத்த நுாறு ஆண்டுகளில் (2120) உலகின் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும். இது அதிகபட்ச அளவு.

கடந்த நுாறு ஆண்டுகளாகவே உலகின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் ரசாயன வாயுக்கள், குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளிப்படும் வாயுக்கள், ரேடியோ அலைகள், அலைபேசிக்கான அலைகள், ரேடார் அலைகள், சாட்டிலைட்டில் இருந்து வீசும் அலைக்கற்றைகள் போன்ற எண்ணற்ற அலைகள், பிரபஞ்சத்தில் இருந்து சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்களில் இருந்து பூமிக்கு வரும் அலைகளை சிதைத்து சின்னா பின்னமாக்குகின்றன.


சமநிலைக்கு இடையூறு


1917ல் ரேடியோ அலைக்கற்றைகளை கண்டுபிடித்து பரப்பியபோது, 1918ல் ஸ்பானிஷ் புளூ பரவி பலஆயிரம் பேரை தாக்கியது. மனிதசெல்களை விஷமாக்கின. 1968ல் ரேடார் கருவி கண்டுபிடிக்கப்பட்டு அதன் அலைவீச்சுக்களால் ஹாங்காங் புளூ காய்ச்சல் பரவியது.

உலகு எங்கும் இயற்கையாக வியாபித்திருக்கும் 'எலக்ட்ரிக் மேக்னடிக் பீல்டை' செயற்கையான ரேடியோ, ரேடார் மற்றும் சாட்டிலைட் ஒலிக்கற்றைகள் சிதைக்கின்றன. இதனால் சூரிய, சந்திர, ஜூபிடர், செவ்வாய் போன்ற கிரகங்களில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்வீச்சுகள் கூட்டாக பூமியில் பட்டு சமநிலையில் வைத்திருக்கும் சமநிலைக்கு இடையூறாக உள்ளது.இது பூமிப்பந்தை பத்திரமாக வைத்திருக்கும் பாதுகாப்பு கவசத்தை நிலைகுலைய செய்கின்றன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும்போது உறங்கிக் கிடக்கும் வைரஸ்கள் விழித்தெழுகின்றன.


ஊகான் செய்த வேலை


சமீபத்தில் 100 ஆயிரம் சாட்டிலைட்டுடன் 5ஜியை முதலில் நிறுவிய நகரம் ஊகான் நகரம் தான். அந்த சீன நகரத்தில்தான் சைத்தான் கொரோனா பரவியதென்று உங்களுக்கு தெரியும். 5ஜி நிறுவிய ஆறு மாதங்களில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.இந்த 3ஜி, 4ஜி, 5ஜி அலைக்கற்றைகளை நமது நெஞ்சிலும், பாக்கெட்டிலும் கைகளிலும் சுமந்து திரிகிறோம். எவ்வாறு ஒரே நிமிடத்தில் இங்கிருந்து வாஷிங்டனுக்கும், ஜப்பானுக்கும் உடனடியாக தொடர்பு கொள்ள முடிகிறதோ அவ்வாறே ஆறே மாதங்களில் வைரஸ்கள் உலகமெங்கும் நோய் தொற்றை பரப்புகின்றன.

சுற்றுச்சூழல் கெடுதல், விண்வெளி ஆய்வால் ஏற்படும் மாசு, இயற்கை வளங்களை அழித்துக் கட்டடங்கள் பெருகுவது, காடுகளை கண்மூடித்தனமாக அழிப்பது போன்றவற்றால் உலகில் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனை 'குளோபல் வார்மிங்' என்பர். இதன் பாதிப்பை பற்றி இயற்கை ஆர்வலர்கள் கதறியும் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.


உருகும் பனிப்பாறைகள்;

காற்றில் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு 31 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வாயு சுவாசிப்பதற்கு ஏற்றதல்ல. வடதுருவத்தில் உள்ள பனிப்பாறைகளின் மொத்த அளவில் 15 சதவீதம் உருகிவிட்டன. பனிக்கட்டிகளின் அடர்த்தி 40 சதவீதம் குறைந்துவிட்டது. பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடல்களில் நீர்மட்டம் அதிகரிக்கும். தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும். இந்த குளோபல் வார்மிங்கால் வறட்சி அல்லது பெருவெள்ளம் ஏற்படும்.

சீனாவில் பியர்ல் ஆற்றுப்பகுதி, எகிப்தின் நைல்நதி 2100ல் பெரும் வெள்ளம் ஏற்படும்.உலகில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ரசாயன வாயுக்கள் வரும் வகையில் எந்தப் பொருட்களையும் எரிக்கக் கூடாது. சுற்றுச்சூழலையும், காற்று மண்டலத்தையும் ரசாயன வாயுக்களால் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.


அழிக்கப்படும் காடுகள்


நுண்ணுயிர்கள் தோற்றத்துக்கும், நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் காரணியாகவும் காடுகள் உள்ளன. கொரோனா போன்ற ஆபத்தான நுண்ணுயிர்கள் தோன்றுவதையும் காடுகள் கட்டுக்குள் வைக்கின்றன என்பது டெக்சாஸ் பல்கலை ஆய்வின் சாராம்சம்.

தினமும் 12 ஆயிரம் வகை உயிரினங்கள் இந்த உலகில் இருந்து மடிந்து மறைந்தபடி உள்ளன. 40 ஆயிரம் வகையான உயிரினங்கள் சுவடுகளே இல்லாமல் அழிந்து போய்விட்டன. வாழும் இடம் அழிந்தால் அதற்கேற்ப அங்கே வாழும் இனமும் அழியும். அதாவது 8 சதவீத காடு அழிந்தால் 2 சதவீத உயிரினங்கள் அழிந்துபோகும்.ஒவ்வொரு உயிரி வகையையும் ஒரு போட்டியாளர் பிறந்து முன்னதை நீக்கிவிடுவார். எல்லா இனங்களும் தத்தம் இடத்தை காலி செய்தே ஆகவேண்டும் என்பது இயற்கையின் நியதி. கடந்த 10 லட்சம் ஆண்டுகளில் மனிதனைத் தவிர அவனுடன் பிறந்த வேறு 12 வகை உயிரினங்கள் மறைந்து போய்விட்டன.


உலக வெப்பமயமாதல் காரணம்


ஒவ்வொரு 200, 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கொள்ளை நோய்கள் உலகை ஆட்டிப்படைக்கும். ஆனால் 2000 முதல் 2020 வரை 20 ஆண்டுக்குள் சார்ஸ், கொரோனா போன்ற ஐந்து வகை கொள்ளை நோய்கள் உலகை தாக்கியதற்கு வெப்பமயமாதல் ஆவதே முதற்காரணம். சஹானா பாலைவனத்தில் இருந்து வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானுக்கு படையெடுப்பதற்கும் உலக வெப்பமயமாதல் காரணம்.

உலக வெப்பமயமாதலை தடுக்க அதிகமாக மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.கடலை குப்பை தொட்டியாக்காமலும், மரங்களை வெட்டி பூமியை, தண்ணீரை அசுத்தப்படுத்தாமலும், ஆகாயத்தை ஒளிக்கற்றைகளை அனுப்பி அழிக்காமலும், மலையை வெட்டி சுரங்கங்களை தோண்டாமலும், கனிம வளங்களை சுரண்டாமலும், இயற்கையை காப்பாற்றி இயற்கையோடு இயைந்து வாழப்பழக வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாத்தால்தான் கொரோனாவையும் கடந்து, இனிவரும் வைரஸ்களில் இருந்து தப்பித்து வாழ முடியும்.

-ரா.ராஜசேகரன்

முன்னாள் உதவி வனப்பாதுகாவலர்

திண்டுக்கல். 94424 05961

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜூலை-202009:54:53 IST Report Abuse
chandran, pudhucherry டை அடிப்பது இயற்கையுடன் உகந்த செயலா. நீங்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை நடத்துகிறீரா. மொபைல் போன் இல்லாமல் தான் வாழ்கிறீரா மாமிசம் உண்பதில்லையா. விறகு அடுப்பில் உணவை சமைத்து உண்கிறீரா. சைக்கிள் அல்லது நடந்துதான் எங்கும் செல்கிறீரா. எழுதுவதற்கு எழுத்தாணி பயன்படுத்துகிறீரா.
Rate this:
Cancel
கவிஞன், மட்டகளப்பை,இலங்கை மிக்க தரமான பதிவு ஐயா! சமூகம் என்பது மனிதர்களை மட்டுமே கொண்டது என்பது திரிபு வாதமே ஐயா! பன்நெடுங்கோடி பல்லுயிர் அதில் அடங்கும் என்பது அறியப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X