சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

கொரோனா போல் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
அன்புமணி ராமதாஸ், அழகிரி ,வீரமணி,பினராயி விஜயன், Experts, sex trafficking, sex crimes, covid pandemic, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown,

'கொரோனா போல, நாளுக்கு நாள், பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; என்ன செய்யப் போகிறது அரசு...' என, கேட்கத் துாண்டும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை:

உலகில் மன்னிக்கக்கூடாத குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களே. ஆனால், அந்த குற்றங்களை செய்தோர், கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே பிணையில் விடுதலை செய்யப்படுவது, அண்மை காலமாக அதிகரித்துவிட்டது. இது, அறத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

'கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் போராட தயார் தான்; கொரோனா பீதியில், மக்கள் தயாராக இல்லையே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மசோதாவை, மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது; மக்கள் விரோத நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. மண்ணையும், விவசாயிகளையும் அழிக்கும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.

'இது, தமிழக மண்; தமிழ் மண்; நேர்மையாளர்கள் நிறைந்த மண்; அரசியல் கோமாளிகளையும், அநியாயக்காரர்களையும், வளர விடாமல் தடுக்கும் மண்...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:


latest tamil news
இட ஒதுக்கீடு வழக்கில் கிடைத்துள்ள நீதி, இது, ஈ.வெ.ரா.,வின் மண் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. சமூக நீதிக்காக இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழகம் என்பதும் உறுதியாகியுள்ளது. சமூக நீதி வெளிச்சமும், அதற்கான உரிமை குரலும் நாடு முழுதும் ஒலிக்கும்.

'மருந்தே இல்லாத சிகிச்சைக்கு, இவ்வளவு கட்டணமா என, மக்கள் கேட்கின்றனரே...' என, சொல்லத் துாண்டும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி:

கொரோனா சிகிச்சையில், கேரள தனியார் மருத்துவமனைகளில், நாட்டிலேயே குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு, பொது வார்டுகளில் 2,300, அவசர சிகிச்சைப் பிரிவில் 6,500, வென்டிலேட்டர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரிடம், 11 ஆயிரத்து, 500 ரூபாய் தான் கட்டணமாக வசூலிக்கப்படும்.

'நீங்கள் எந்த காலத்தில் தான், போலீசார் நியாயமாக செயல்பட்டனர் என கூறி இருக்கிறீர்கள்; இது போன்று பேசுவது, உங்களுக்கு வாடிக்கை தான்...' என, நெத்தியடியாக கூற வைக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:

சட்டத்தின் அடிப்படையில் தான், போலீசார் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அல்ல. 'ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு' என்ற அடிப்படையில் அணுகுவதை காவல் துறை கைவிட வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
31-ஜூலை-202016:59:27 IST Report Abuse
vnatarajan இதை நீங்க சீனாவுக்கு போய் அங்கெ சொல்லுங்களேன். ஏன்னா அங்கேதான் பிறப்பு உரிமை கொள்கைக்கு உய்குர் முஸ்லீம் இனமக்களுக்கு ஒரு சட்டம் சீனர்களுக்கு ஒரு சட்டம்னு போலீஸ் கடைபிடிக்கிறார்கள்னு சொல்லறாங்க
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
31-ஜூலை-202016:33:53 IST Report Abuse
Baskar பெரியார் சொத்தை கொள்ளை அடித்து வாழும் ஓசிசோறு வீரமணி நீயெல்லாம் தமிழையே தமிழ் மக்களை பற்றி பேசவோ யோக்கியதை இல்லாதவன்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
31-ஜூலை-202010:55:35 IST Report Abuse
siriyaar அதற்கு சினிமாதான் காரணம், அதிலும் விஜய் சூர்யா கார்த்தி போன்றவர்கள் நடிக்கும் படம்தான் காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X