பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெ., பெயர்: முதல்வர் அறிவிப்பு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
Chennai, chennai Metro, Jayalalitha, MGR, CM EPS, சென்னை, மெட்ரோ, பெயர், மாற்றம், எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா, முதல்வர், பழனிசாமி, இபிஎஸ்

சென்னை: சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரில் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த 2015 முதல் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவையால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். சில இடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களின் பெயர்களைச் சூட்டி முதல்வர் இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


latest tamil news


அதன்படி, சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ என்பதை மாற்றி 'அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ' என்று பெயரிடப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்' என பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ என்பது 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ' என்று அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


latest tamil news


அதேபோல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோவுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ' என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
01-ஆக-202010:08:08 IST Report Abuse
Nallavan Nallavan இந்தப் பழக்கத்தை முதலில் துவக்கிய காங்கிரசுக்கு (அந்தக் காலத்திலிருந்தே எதற்கெடுத்தாலும் நேரு அல்லது இந்திரா பெயர்) நன்றி ...........
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
01-ஆக-202006:58:31 IST Report Abuse
Muguntharajan ரயிலே ஓடல. இந்த கொரானா பிரச்சனைல இப்ப இது ரொம்ப முக்கியம். கிரிமினல் பெயரை வைக்கக்கூடாது. வழக்கு தொடுத்து பெயர் வைத்தவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
31-ஜூலை-202019:45:02 IST Report Abuse
Nagarajan D உலகத்திலேயே முதல் குற்றவாளியின் பெயரில் ஒரு ரயில் நிலையத்திற்கு பெயர் சினிமா மோகத்தில் அலையும் திருட்டு திராவிட ராமசாமியின் எடுபிடிகளால் மட்டுமே முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X