சீன அரசை எதிர்க்கும் உய்குர் இனப்பெண்கள்; தொடர்கிறதா இனப்பாகுபாடு?

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
China, Uyghur Xinjiang, Birth Control, சீனா, உய்குர், முஸ்லிம், பெண்கள், கருத்தடை

பெய்ஜிங்: உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. மக்கள் தொகையை குறைக்க சீனா தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவந்தாலே ஒழிய பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என சீனா தற்போது உணர்ந்துள்ளது. இதனையடுத்து இரண்டு குழந்தைகளுக்குமேல் பெறுபவர்களுக்கு சீன அரசு அதிக அளவில் அபராதம் விதிக்கிறது. இதில் தற்போது இனப்பாகுபாடு நிலவுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உருமி வசிக்கும் ஜூம்ரட் தாவூத் என்ற 38 வயது உய்குர் இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த பெண் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள அந்த மாகாணத்தில் அரசு அனுமதிக்கிறது.

இந்நிலையில் இவர் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தால் இவருக்கு 18 ஆயிரத்து 400 யுவான் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை அவர் அரசு அலுவலகத்திற்கு சென்று செலுத்த முற்பட்டபோது அவர் கட்டாய கருத்தடை செய்துகொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.


latest tamil news


பெலோபியன் டியூப் எனப்படும் கருப்பையை பெண் உறுப்புடன் இணைக்கும் குழாயை அறுத்து முடிச்சிட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு செய்வதால் நிரந்தரமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. உய்குர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் இவ்வாறு கட்டாய கருத்தடை செய்துகொள்ள வலியுறுத்தப்படுகின்றனர்.

சீனாவில் குறிப்பாக இதுபோன்ற சில இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறிவிக்கப்படுகிறது என இந்த இனங்களைச் சேர்ந்த பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


latest tamil news


குறிப்பாக சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் சீனாவில் அதிகமாக ஒடுக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இவர்களது மக்கள் தொகை அதிகரித்து விடக்கூடாது என சீன அரசு திட்டமிட்டு இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இனப் பாகுபாடு இல்லாமல் அனைத்து மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் கட்டாய கருத்தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டுமே தவிர இவ்வாறு திட்டமிட்டு ஒரு இனத்தை சேர்ந்தவரை தாக்கக் கூடாது என கம்யூனிஸ அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவர்களின் இந்த கருத்தையெல்லாம் சீன கம்யூனிச அரசு காதில் வாங்குவதாக இல்லை. தொடர்ந்து தன்னுடைய இரும்புக்கரம் கொண்டு தான் செய்ய விரும்பியதை செய்துகொண்டுதான் இருக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
02-ஆக-202011:43:46 IST Report Abuse
hasan வடஇந்தியாவில் உள்ள ஹிந்துக்களில் பெரும்பான்மையினர் பத்து பன்னிரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டு மக்கள் தொகையை நூறு கோடியிலிருந்து நூற்றி முப்பது கோடிக்கு மேல் கொண்டு வந்து விட்டனர், இந்தியாவில் முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் கடந்த இருபது ஆண்டுகளில் பதினான்கு கோடியிலிருந்து பதினெட்டு கோடியாக உயர்ந்துள்ளது அதே சமயம் ஹிந்துக்களின் வளர்ச்சி எழுபது கோடியிலிருந்து நூற்று பதினைந்து கோடியாக உயர்ந்துள்ளது இதிலிருந்தே அதிகமாக மக்கள் தொகையை பெருக்குவது யார் என்று விளங்கி கொள்ளலாம்
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-202013:07:39 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyanதப்பான கணக்கு , இந்தியா வில் முஸ்லீம் இனம் தான் குடும்ப கட்டுப்பாடு இல்லாமல், ஐந்து அல்லது ஆறு குழைந்தைகள் பெற்றுகொள் கிறார்கள் ..ஹிந்து இந்தியா வின் எந்த பகுதியிலும் இரண்டு குழைந்தைகள் பெற்று கொள்வது இல்லை ... பழைய ஜெனெரேஷன் 1960 ல் தான் அப்படி , 2020 ல் முஸ்லீம் இனம் தான் குடும்ப கட்டுப்பாடு இல்லாமல்..முஸ்லீம் மக்கள் தொகை யை அதிக படுத்தி .. இந்தியா வை ..உலகில் இரண்டாவது முஸ்லீம் எண்ணிக்கை உள்ள நாடக ஆக்கி விட்டார்கள் .....
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-ஆக-202008:39:53 IST Report Abuse
Sampath Kumar இந்த பாகுபாடு இல்லாத நாட்டையே கிடையாது மனித நேயம் என்பது செய்து பொய் விட்டது எல்லாம் அரசியில் சித்து விளையாட்டு
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
01-ஆக-202010:16:47 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan மோடியைத் திட்டும் கம்யூனிஸ்டுகள் சீனாவைத் தட்டிக் கேட்பார்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X