புதிய கல்விக் கொள்கை: காங்., எம்பி., சசி தரூர் வரவேற்பு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
NEP 2020, New Education Policy, Shashi Tharoor, Tharoor, Education Policy, congress leader, புதிய கல்விக் கொள்கை, சசி தரூர், காங்கிரஸ், வரவேற்பு

புதுடில்லி: மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையை காங்., மூத்த தலைவரும், எம்பி.,யுமான சசி தரூர் வரவேற்றுள்ளார்.

இது குறித்து காங்., எம்பி., சசிதரூர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: 2020-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை வரவேற்க நிறைய இருக்கிறது. எங்களில் சிலர் அளித்த பல பரிந்துரைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இது ஏன் முதலில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக கொண்டுவரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் நான் இருந்த நாளில் இருந்து, 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு 1986-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை திருத்தி அமைக்கும்படி பரிந்துரைத்து வந்தேன்.


latest tamil news


மோடி அரசு இதை செய்வதற்கு 6 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாலும் கூட இதை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் சவால் என்னவென்றால் நமது எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்வது ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தில் 6% கல்விக்கு செலவிடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் மோடி அரசு கல்விக்கான செலவை குறைத்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
31-ஜூலை-202019:55:11 IST Report Abuse
Rameeparithi சசி தாரூர் கட்சியிலிருந்து நீக்கம் -ராகுல் கான் நடவடிக்கை நாளைய தலைப்பு செய்தி இதுதான்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
31-ஜூலை-202018:13:51 IST Report Abuse
konanki ,ஏங்க இவருக்கு /இவர் குடும்பத்துக்கு / பினாமிகள் பேர்ல் சொந்தமா ஸ்கூல் இன்ஜினியரிங் காலேஜ் மெடிக்கல் காலேஜ் இல்லை. வர்த்தக நஷ்டம் இல்லை. அதனால் வரவேற்கிறார்.9 எங்க சுடலு கான் மற்றும் தீய சகதியினர் கட்சி எம் பிக்கள் எம் எல் ஏக்கள் அவங்க/குடும்பம்/பினாமிகள் பேரில சிபிஎஸ்இ பள்ளிகள் மெடிக்கல்/இன்ஜினியரிங் காலேஜ் ஏன் தனியார் யூனிவர்ஸிடியே இருக்கு. நீங்க பாட்டுக்கு புதிய கல்வி கொள்கை ன்னு மாணவர்கள்களுக்கு நல்லது செய்ஞ்சிட்டிங்கன்னா நாங்க எப்படி ,கல்வி யாவரம் பண்றது? கோடி கோடி யா கல்லா எப்படி கட்றது? எங்களுக்கு எவ்வளவோ நஷ்டம் . சும்மா இருப்பமா? அதான் சேனல்கள் நெறியாளர்கள் சமூக ஆர்வலர்கள் இடது சாரி சிந்தனையாளர்கள் காசுக்காக டிவியில் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றும் நயவஞ்சக பேச்சாளர்கள் கம்யூனிஸ்ட்கள் அர்பன் நக்ஸல்கள் போராளிகள் "தீடிர்" போராளிகள் எல்லோருக்கும் "நல்லா கவனிச்சு" ஏவி விட்ருக்கோம். சும்மா கலக்குவாங்க பாருங்க.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
31-ஜூலை-202018:10:03 IST Report Abuse
Balasubramanian Ramanathan என்ன அழகிரி இதெல்லாம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X