பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் சீன கலர் டிவி இறக்குமதிக்கு கட்டுப்பாடு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: சீன கலர் டிவி இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளது.

லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த மோதலை தொடர்ந்து சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக அந்நாட்டு கலர் டிவி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


கல்வான் மோதலைத் தொடர்ந்து சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதையடுத்து சீனாவில் இருந்து மின்கருவிகள் எதுவும் இறக்குமதி செய்ய வேண்டாம் என மின்நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ரயில்வே துறைகளிலும் நெடுஞ்சாலைத் துறைகளிலும் சீனாவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் சீன கலர் டிவி இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு முன் கட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலையில் சீனாவில் இருந்து கலர் டிவி இறக்குமதி செய்ய தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தற்போது கலர் டிவிக்கான இறக்குமதி கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசிடம் லைசென்ஸ் பெற வேண்டியது அவசியம். சீனாவின் கலர் டிவி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை' இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் டிவி வணிகம் நடக்கிறது. இதில் 36 சதவீதம் சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-202008:21:39 IST Report Abuse
SAPERE AUDE நல்லதொரு கொள்கை, ஒரு காலத்தில் நமது நாடு TV தயாரிப்பில் உலகத்தரமான TV க்களை தயாரித்து கொண்டிருந்தது. முந்தய அரசின் இறக்குமதி கொள்கையினால், தரமற்ற சீன தயாரிப்புகள் கடல் அலை போல வந்து உள் நாட்டு பொருள்களை சந்தையிலிருந்து வெளியேற்றிவிட்டன. நம் நாட்டின் திறமையை வெளிநாட்டினர் இன்று உபயோகப்படுத்திக்கொண்டிருக்கின்றனர் ! இப்போதாவது நமது அரசு உறிய நடவடிக்கை எடுந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஆக-202023:41:55 IST Report Abuse
தல புராணம்நமது நாடு TV தயாரிப்பில் உலகத்தரமான TV க்களை தயாரித்து கொண்டிருந்தது .. ஹா ஹா .. Fully Assembled Kit களை இறக்குமதி பண்ணி இந்திய பிராண்டு லேபிள்களை ஒட்டிக்கொண்டிருந்தோம். இப்போ லேபில் கூட சீனாவிலிருந்து இறக்குமதி ஆகுது.....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
31-ஜூலை-202023:32:44 IST Report Abuse
தல புராணம் வாய்கிழிய கூப்பாடு , இறக்குமதிக்கு கட்டுப்பாடு, - தடை இல்லை, போலி தேசபக்தி பதர்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X