பீர் குடித்துவிட்டு குழந்தை மீது புரண்டு படுத்து கொன்ற தாய் விடுதலை!

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Baby Died, Mother, Beer, Slept, Court, Not Crime

வாஷிங்டன்: அமெரிக்காவில் பீர் குடித்துவிட்டு கைக்குழந்தை அருகில் படுத்து உறங்கிய தாய், புரண்டு படுத்ததில் குழந்தை மூச்சடைத்து இறந்தது. இவ்வழக்கில் தண்டனை பெற்ற அவரை தற்போது உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலேன்டை சேர்ந்தவர் முரியல் மோரிசன். 2013-ம் ஆண்டு இவர் தனது வீட்டில் பீர் அருந்திவிட்டு போதையில் தனது நான்கு மாத கைக்குழந்தை மற்றும் நான்கு வயது மகளுக்கு அருகே படுத்து உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது கைக்குழந்தையின் முகம் நீலம் பாரித்த நிலையில் பேச்சு மூச்சற்று கிடந்துள்ளது. மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். விசாரணையில் போதையில் தாய் குழந்தையின் மீது புரண்டு படுத்ததில் கைக்குழந்தை மூச்சுவிட முடியாமல் இறந்தது தெரிய வந்தது.


latest tamil news



அலட்சியமாக செயல்பட்டு விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. 2013-ல் இவ்வழக்கில் முரியல் மோரிசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மேரிலான்ட் உயர் நீதிமன்றத்தில் அப்பெண்மணி மேல் முறையீடு செய்தார். அதனை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், நான்கு நீதிபதிகள் முரியல் அலட்சியமாக செயல்பட்டார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி தண்டனையை ரத்து செய்தனர்.

அவர்கள் கருத்திலிருந்து மாறுபட்ட மற்றொரு நீதிபதி குழந்தையுடன் இணைந்து தூங்குவது குற்றமில்லை, ஆனால் குடித்துவிட்டு தூங்குவது கணிசமான ஆபத்தை உருவாக்குகிறது என்று கூறினார். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,500 குழந்தைகள் தூக்கத்தின் போது இறக்கின்றன. இது தொடர்பாக அமெரிக்க குழந்தை மருத்துவர்கள் அகாடமி, பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஒரே அறையில் உறங்கலாம், ஆனால் ஒரே படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பான உறக்கம் தொடர்பாக அங்குள்ள சுகாதார அதிகாரிகள் நீண்ட காலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யார்மனிதன் - Toronto,கனடா
31-ஜூலை-202021:24:37 IST Report Abuse
யார்மனிதன் நல்ல முன்னேற்ற தின் விளைவு...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
31-ஜூலை-202020:54:33 IST Report Abuse
Bhaskaran இவளும் ஒரு தாயா .பாரதிதாசனின் குடும்ப விளக்கில் ஒருகாட்சி .மனைவிஅயர்ந்து தூங்குகிறாள் ,அருகே அவள் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையும் உறங்குகிறது .மனைவி தூக்கத்தில் தெரியாமல் புரண்டு படுத்தாள் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வரும் என்று ஜன்னலிலிருந்து பார்த்த கணவன் ஒரு பூவை மனைவியின் மேல் போடுகிறான் .பூ தவறி குழந்தையின் மேல் படுகிறது .அயர்ந்த தூக்கத்திலும் அனிச்சை செயலாக அத்தாயின் கரம் குழந்தையின் மேல் விழுந்த பூவை தள்ளிவிடுகிறது இதை பார்த்த கணவன் வியக்கிறேன் இதுவல்லவோ தாய்மை என்று .
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
01-ஆக-202010:17:16 IST Report Abuse
RaajaRaja Cholanசார் வாழ் இன்னும் கனவு உலகித்திலேயே சஞ்சரிக்கிறார். நிஜ உலகில் இதை விட கொடுரீகளும் சிலர் உள்ளனர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X