மாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 மாணவிகள் கர்ப்பம்

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

லிலோன்க்வே: கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மாலவியில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் 5 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில் 7000 மாணவிகள் கா்ப்பமாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு ஆப்பரிக்க நாடான மாலவியிலும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் அந்நாட்டு மாணவிகள் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 7,000 பேர் கர்ப்பமாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் இளைஞர் சுகாதார சேவை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் மாலிபா பேசியதாவது, ' கடந்த ஐந்து மாத காலமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நேரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்த சூழலில் 7,000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். பாலோம்பே நகரில் மட்டும் 1000 மாணவிகளும், மிசம்பா மற்றும் நசான்ஜே நகரில் 724 மாணவிகளும் கர்ப்பம் அடைந்துள்ளனர்.' இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அந்நாட்டின் கல்வித் துறை இயக்குனர் பெனிடிக்டோ கோன்டோவே தெரிவித்த தாவது, 'கொரோனா பரவல் நேரத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன' இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news


இது குறித்து பேசிய கென்யா நாட்டு அதிகாரிகள், ' ஊரடங்கின் போது கடந்த 3 மாத காலத்தில் மட்டும் கென்யாவில் மட்டும் 1,50,000 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர். இது சராசரி எண்ணிக்கையை விட 40 சதவீதம் அதிகமாகும்' இவ்வாறு தெரிவித்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
04-ஆக-202017:53:33 IST Report Abuse
Indian  Ravichandran இந்த இருநாடுகளுக்கும் பனி நிமித்தமாக நான் போனதுண்டு. இது அமைதிமார்கத்தினர் மற்றும் சிறுபான்மை மத மாற்ற கும்பலால் சீரழிந்து போய்விட்டது. கலாச்சாரம் அமைதிமார்கத்தினர்தாம் கற்றுத்தருகிறார்
Rate this:
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
04-ஆக-202013:49:54 IST Report Abuse
Sankare Eswar இது ரொம்ப பெரிய விஷயம்.
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஆக-202017:10:20 IST Report Abuse
Yaro Oruvan பின் குறிப்பு... இந்த நாடு அமைதி மார்க்க நாடு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X