பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் படிப்படியாக குறைகிறது: ஹர்ஷவர்தன்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது; உலகளவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கொரோனா குறித்த மத்திய அமைச்சர்கள் கூட்டம் டில்லியில் நடந்தது. ஹர்ஷவர்தன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அமைச்சரக்ள் ஜெய்சங்கர், ஹர்தீப்
health minister, Harsh Vardhan, GoM meeting

புதுடில்லி: 'கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது; உலகளவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்த மத்திய அமைச்சர்கள் கூட்டம் டில்லியில் நடந்தது. ஹர்ஷவர்தன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அமைச்சரக்ள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் லால் மண்டாவியா, அஸ்வினி குமார் சவுபே மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.


latest tamil news


கூட்டத்தில், அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியதாவது: கொரோனாவிலிருந்து இந்தியாவில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். இதனால், நாட்டில் குணமடைவோர் சதவீதம், இதுவரை இல்லாத அளவுக்கு, 64.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாவோர் வீதமும் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாபவர்களின் சதவீமை் 2.18 ஆக உள்ளது. உலக நாடுகளில் கொரோனா உயிரிழப்பு குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

தற்போது நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரில் 0.28 சதவீதத்தினருக்கு மட்டுமே வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 1.61 சதவீதத்தினர் மட்டுமே ஐசியு.,வில் உள்ளனர். 2.32 சதவீதத்தினருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X