சிறு துளி நீரையும் இழக்க தெலுங்கானா தயாராக இல்லை ; முதல்வர் சந்திரசேகர ராவ்

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானாவிற்கு சொந்தமான சிறுதுளி நீரையும் இழக்க தயாராக இல்லை என நதிநீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.தெலுங்கானா அரசு விவசாயதுறையை மேம்படுத்த நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று பிரகதிபவனில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில்

ஐதராபாத் : தெலுங்கானாவிற்கு சொந்தமான சிறுதுளி நீரையும் இழக்க தயாராக இல்லை என நதிநீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.latest tamil newsதெலுங்கானா அரசு விவசாயதுறையை மேம்படுத்த நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று பிரகதிபவனில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் நீர் பகிர்வு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஆக., 5 ம் தேதி முன்மொழியப்பட்ட அப்பெக்ஸ் கவுன்சில் கூட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ஜல் சக்தி அமைச்சகத்தை முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக முதல்வர் ராவ் கூறுகையில், தெலுங்கானாவின் வளர்ச்சிக்கு மாநில அரசு எல்லாவிதமாகவும் போராடி வருகிறது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பருவமழை அதிகரித்ததால் நீர் வளம் உயர்ந்துள்ளது. ஆயினும் தெலுங்கானாவிற்கு சொந்தமான ஒரு துளி (சொட்டு) தண்ணீரை கூட வீணடிக்க (இழக்க) கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது பிரிக்கப்படாத ஆந்திராவில் பாசனதுறையில் பாகுபாடு காட்டப்பட்டது. மத்திய ஜல் சக்தி செயலாளர் உபி சிங், எழுதிய கடிதத்தில், இரு மாநிலங்களுக்கிடையான நதிநீர் பிரச்னை குறித்து கருத்துகேட்பதற்கானகூட்டத்தை ஆக.,5 ல் நடத்த திட்டமிட்டது.


latest tamil newsமாநில அரசு உயர்மட்ட கூட்டத்தை ஆக.,20 க்கு பிறகு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் சோமேஷ்குமார் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுவார். மாநிலங்களுக்கு இடையான பிரச்னையை தீர்ப்பதில் ஜல்சக்தி அமைச்சகம் ஆற்றின் பங்கின் மீது கூட்டம் அதிருப்தியில் உள்ளது. 2014 ஆம் ஆண்டின் ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் பிரிவு 13 ன் படி,தெலுங்கானாவிற்கும் ஆந்திராவிற்கும் இடையிலான மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை தீர்ப்பாயத்தில் ஒப்படைக்குமாறு தெலுங்கானா அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது, ஆனால் அமைச்சகம் அதன் கோரிக்கையை புறக்கணித்தது. மையத்தின் இழிவான அணுகுமுறையை வன்மையாக கண்டனம் செய்த உயர்மட்டக் கூட்டம், இதுபோன்றஅணுகுமுறையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும், இது இரு மாநிலங்களுக்கும் மிகவும் செலவாகும்.

இரு அண்டை மாநிலங்களுக்கிடையில் நீர் பகிர்வு தொடர்பாக வரும் பிரச்னைகள் எந்த மாநிலத்திற்கும் நல்லதல்ல. மகாபூப்நகர், ரங்காரெட்டி மற்றும் நல்கொண்டா போன்ற மாவட்டங்களுக்கு உதவும் பாலமுரு-ரங்காரெட்டி மற்றும் திண்டி லிப்ட் பாசன திட்டங்கள் போன்ற திட்டங்களை முடிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கிருஷ்ணா மற்றும் கோதாவரி நீரில் தெலுங்கானாவின் முறையான பங்கை முழுமையாகப் பயன்படுத்த கூட்டம் முடிவு செய்தது, மாநிலத்தின் பங்கில் எந்தவித சமரசமும் இன்றி போர்க்காலத்தில் திட்டங்களை முடித்தது. இவ்வாறு தெரிவித்தார்.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
01-ஆக-202002:01:41 IST Report Abuse
babu innum yen porumai kaakanum , lets all states fight for water and who ever wins gets the water. When these idiots divided Andhra into 2 didnt they anticipate this and decide it then.
Rate this:
Cancel
31-ஜூலை-202021:31:59 IST Report Abuse
ஆரூர் ரங் எந்த நதியும் குறிபிட்ட மாநிலத்துக்கு சொந்தமானதல்ல. நாட்டின் பொதுச்சொத்து. காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
31-ஜூலை-202021:23:33 IST Report Abuse
Ramesh Sargam மழை நீரை முறையாக சேர்த்துவைக்க ஒரு வக்கில்லை. இதில் சிறுதுளி நீரையும் இழக்க தயாராக இல்லை என்று முழக்கம் வேறு. இவங்கயெல்லாம் இப்படி பேசி பேசியே காலத்தை ஓட்டிடுவானுங்க. வேலைக்கு ஒன்னும் ஒத்துவராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X