வியட்நாமில் கொரோனாவுக்கு முதல் பலி

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
vietnam, coronavirus, firist dead, covid19

ஹனாய்: வியட்நாம் நாட்டில், கொரோனாவுக்கு 70 வயது நபர் பலியானார். இது அந்நாட்டின் முதல் பலியாக பதிவாகி உள்ளது.

9 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வியட்நாம், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. 99 நாட்களாக யாரும் கொரோனாவுக்கு பாதிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில், ஹோய் நான் பகுதியில், கொரோனா பாதிப்புக்குள்ளான 70 வயது நபர் உயிரிழந்தார். இது அந்நாட்டில் கொரோனாவுக்கு ஏற்பட்ட முதல் பலியாக பதிவானது.


latest tamil news



வியட்நாம் பிரதமர் நேயென் ஜுவான் கூறியதாவது: டா மாங் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202005:49:31 IST Report Abuse
ஆப்பு இந்தியாவுல கொரோனா நல்ல கண்ட் ரோல்ல இருக்குன்னு ஆளாளுக்கு பேசிக்கறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X