எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுலாவுக்காக திறந்த நேபாளம்..!| Dinamalar

எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுலாவுக்காக திறந்த நேபாளம்..!

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (2)
Share

கொரோனா குறித்து நிச்சயமில்லாத சூழலுக்கு மத்தியில், சுற்றுலாத்துறையை மீட்கும் நடவடிக்கையாக எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களை சுற்றுலாவுக்கு திறப்பதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.latest tamil newsகொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நேபாளம் தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்தது. இதுவரை கொரோனா தொற்றுக்கு 19,547 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளில் மலையேற்றம் மற்றும் சுற்றுலா மூலம் பல மில்லியன் கணக்கில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை பெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிப்பை சந்தித்தது.

இந்நிலையில் கடந்த வாரம் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, தற்போது மலையேற்றம் உள்ளிட்ட சுற்றுலா நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுவதாக சுற்றுலாத்துறை இயக்குனர் மீரா ஆச்சார்யா தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை வரும் ஆக.17ம் தேதி துவங்கவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் தயார் செய்து வருவதாகவும் மீரா தெரிவித்தார்.


latest tamil newsநேபாளத்தின் மிகப்பெரிய பயண ஏற்பாட்டு நிறுவனமான மிங்மா ஷெர்பா, வாடிக்கையாளர்கள் அழைக்கிறார்கள். ஆனால் வருகை தரும் பயணிகளுக்கு எவ்வளவு காலம் தனிமைப்படுத்தப் வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறோம். வசந்த காலத்திற்குப் பிறகு நாங்கள் பயணங்களை நடத்த முடிந்தால் அது மலையேறும் தொழிலாளர்களுக்கு ஒரு நிவாரணமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. மலையேறும் சீசனின் போது எவரெஸ்ட் மற்றும் மற்ற சிகரங்களின் அடிவாரத்தில் தற்காலிக கூடாரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

மலையேறுபவர்களும், அவர்களுக்கு உதவும் பணியாளர்களும் நெருக்கமாக இருக்க வேண்டி இருக்கும். அதிக உயரத்தில் சுவாசிப்பது ஏற்கனவே கடினம். இதனிடையே மலையேறுபவர் களில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருந்தால் மருத்துவ அபாயத்தை ஏற்படுத்தும்.ஃபுர்டன்பேக் அட்வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் லூகாஸ் ஃபர்டன்பேக் , அனைத்து பயணங்களையும் ரத்து செய்துள்ளதாக கூறினார். இப்போதைய சூழலில் பயணத்தை மேற்கொள்வது சோதனை மற்றும் பிழையாக இருக்குமென கருதுகிறேன். சோதனை மற்றும் பிழை ஒருபோதும் எங்கள் பயணத்திற்கான உத்தி அல்ல.

எங்களுடைய ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு நாங்களே பொறுப்பு என கூறினார். மலையேற்ற நிபுணர்கள் கூறுகையில், செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையிலான சீசன் மிகவும் அபாயமிக்க ஒன்று. ஏனெனில் அதிக காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை முக்கிய காரணமாகும். உலகின் மிக உயர்ந்த சிகரத்தில் ஒரு சிலர் மட்டுமே ஏற முயற்சிப்பதை காண முடியும்.

கடந்தாண்டு நெரிச்சல்மிக்க வசந்த கால சீசனில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 885 பேர் பதிவு செய்திருந்தனர். 644 பேர் தெற்கில் இருந்து,241 பேர் திபெத்தின் வடக்கில் இருந்து மலையேறினர். சீசன் முடிவில் 11 பேர் உயிரிழந்தனர். அவற்றில் 4 பேர் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலியானதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X