பீஹார் சட்டசபை தேர்தலை நடத்த பஸ்வான் எதிர்ப்பு| Dinamalar

பீஹார் சட்டசபை தேர்தலை நடத்த பஸ்வான் எதிர்ப்பு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020
Share
பாட்னா: பீஹாரில்இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை நடத்தக்கூடாது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பீஹார் மாநில பிரதான எதிர்கட்சியான லோக் ஜனசக்தி கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அமைச்சராக உள்ளார்.பீஹாரில் பா.ஜ. கூட்டணி வைத்துள்ள முதல்வர் நிதீஷ் குமார்
BJP ally LJP writes ,EC asking not to hold, Bihar elections, says 'priority should be saving people's lives'

பாட்னா: பீஹாரில்இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை நடத்தக்கூடாது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பீஹார் மாநில பிரதான எதிர்கட்சியான லோக் ஜனசக்தி கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அமைச்சராக உள்ளார்.
பீஹாரில் பா.ஜ. கூட்டணி வைத்துள்ள முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி இந்தாண்டு அக்டோபரில் நிறைவடைகிறது. இதையடுத்து சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.


latest tamil news
இந்நிலையில் பீஹாரில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று மாநிலத்தில் ஊரடங்கு ஆக. 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் அளித்த பேட்டியில், கொரோனா காலம் தீவிரமடைந்து வரும் நிலையில் மழை வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை கருத்தில் கொண்டு சட்டசபை தேர்தலை நடத்தக்கூடாது. நடத்துவது சரியாக இருக்காது என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X