ஆந்திராவில் ஒரே நாளில் 3,822 பேர் கொரோனாவில் இருந்து மீட்பு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
அமராவதி : ஆந்திராவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,822 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் மூன்றாவது நாளாக 10,000 ஐ தாண்டி நோய் பாதிப்பு செல்வதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திராவில் இன்று புதிதாக 10,376 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது

அமராவதி : ஆந்திராவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,822 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் மூன்றாவது நாளாக 10,000 ஐ தாண்டி நோய் பாதிப்பு செல்வதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திராவில் இன்று புதிதாக 10,376 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,40,933 ஆக அதிகரித்தது. தொற்றுக்கு ஒரு நாளில் அதிகபட்சமாக 68 பேர் பலியாகினர். மாநிலத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,349 ஆக உயர்ந்தது.


latest tamil news



ஆந்திராவில் ஒரே நாளில் 3,822 பேர் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 63,864 ஆக உயர்ந்தது. தற்போது 75,720 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 19,51,776 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X