எம்ஜிஆர், ஜெ.,க்கு துரோகம் செய்ய துணிந்து விட்டதா அதிமுக: ஸ்டாலின் கேள்வி - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்ஜிஆர், ஜெ.,க்கு துரோகம் செய்ய துணிந்து விட்டதா அதிமுக: ஸ்டாலின் கேள்வி

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (78)
Share
DMK, MK Stalin, Stalin, ADMK, MGR, Jayalalitha, எம்ஜிஆர், அதிமுக, ஜெயலலிதா, திமுக, ஸ்டாலின்

சென்னை: புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத இன்றைய அதிமுக அரசு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய துணிந்து விட்டதா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கும் புதிய கல்வி கொள்கை, மாநில உரிமைகளுக்கும், சமூக நீதிக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிரானது. இளைஞர்களின் எதிர்காலத்தை கடும் நெருக்கடி இருளில் தள்ளும்.


latest tamil news



தமிழகத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில், அதிமுக அரசு, மத்திய அரசின் கோபத்துக்கு பயந்து அமைதி காப்பது, தமிழகத்தின் நூற்றாண்டு கால கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். தமிழகத்தில் ஹிந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை என அண்ணா ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரு மொழி கொள்கை தீர்மானத்தின் பயனாக, தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது. மேலும் ஆங்கிலம் வாயிலாக உலக அளவில் தமிழக மாணவர்கள் நல்ல பொறுப்புகளை வகிக்கிறார்கள்.

வட இந்திய மாணவர்களை விட தமிழக மாணவர்கள் பெற்றும் இந்த வளர்ச்சியின் உயரத்தை சிதைத்திடும் நோக்கில், ஹிந்தி, சமஸ்கிருதத்தை, புதிய கல்வி கொள்கையின் மூலம் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரில் இணைத்து கொண்டுள்ள அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும், தங்கள் ஆட்சி காலத்தில், இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வந்த நிலையில், அவர்களுக்கும் சேர்த்து துரோகம் செய்ய, இன்றைய அதிமுக அரசு துணிந்து விட்டதா. இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X