பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை: ஜெகன் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை: ஜெகன் அறிவிப்பு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (3)
Share
Plasma Donors, Andhra Pradesh, jegan mohan reddy

திருப்பதி: ஆந்திராவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால், ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாக்களை பயன்படுத்தி, தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றிலிருந்து மீள்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.


latest tamil news



இந்நிலையில், ஆந்திராவில் தாதேபள்ளி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆய்வு செய்தார். பின் அவர் பேசுகையில், 'கொரோனா பாதிப்பிலிருந்து மீள்பவர்கள், பிளாஸ்மா தானம் செய்தால், அவர்களுக்கு ரூ..5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 1,40,933 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 63,864 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 1,349 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X