மாஸ்க்கினை பெட்ரோல் கொண்டு சுத்தம் செய்யுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபர்

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மணிலா: கொரோனா காலத்தில் மாஸ்க் பயன்படுத்துபவர்கள் அதை பெட்ரோல் கொண்டு சுத்தம் செய்யலாம் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்டர்டே தெரிவித்துள்ளார்.



latest tamil news



கடந்த வெள்ளியன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு அதிபர், மாஸ்கினை சுத்தம் செய்ய கிருமி நாசினி இல்லாதவர்கள் பெட்ரோலை உபயோகப்படுத்துங்கள். ஒரு சில துளிகள் விட்டாலே போதும். நான் தமாஷாக பேசவில்லை என்று கூறினார்.

கொரோனா நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து இருந்து வருகிறது. இதுவரை அங்கு 90,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 2,000க்கும் அதிக எண்ணிக்கையில் கொரோனாவுக்கு அந்நாட்டில் பலியாகி உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக மக்களுக்கு அதிபர் சொன்ன யோசனை குழப்பத்தை ஏற்படுத்தியது.


latest tamil news



இதுகுறித்து பேசிய அந்நாட்டு சுகாதார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் சாண்டியாகோ கூறியதாவது, ' மாஸ்கினை சுத்தப்படுத்த பெட்ரோல் உபயோகிக்கக் கூடாது. அப்படி செய்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மாஸ்க்கினை சோப் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தியோ அல்லது 70 சதவீத ஈதைல் ஐசோபுரோபைல் ஆல்கஹால் கரைசல் கொண்டோ சுத்தப்படுத்திக் கொள்ளலாம்' இவ்வாறு அவர் தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
01-ஆக-202014:05:43 IST Report Abuse
Tamilnesan பாவம்டா கொரநா........உங்க கிட்டே மாட்டிகிட்டு தவிக்குது........
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-202001:25:45 IST Report Abuse
babu இந்த அதிபர் ஆட்சிக்கு வந்தபின் பிலிப்பைன்ஸ் கஞ்சாவை புகைக்ககூட ஆளில்லை. கஞ்சா கையில் இருந்தாலே போலீஸ் கேள்வி கேட்காமல் சுட்டு தள்ளிவிடுவார்கள். மக்களின் மேல் உண்மையான அக்கறையுள்ள அதிபர்.
Rate this:
Cancel
man -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202022:29:33 IST Report Abuse
man IVAR WORLD SCIENTIST🤣🤣🤣
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X