பொது செய்தி

இந்தியா

ஜார்க்கண்டில் ஆக.,31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

ராஞ்சி : ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்புகளையொட்டி ஆக.,31 வரை ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்டிலும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய் பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால், மாநிலத்தின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஆக.,31 வரை நீட்டிக்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைமை செயலாளர் சுக்தேவ் சிங் நேற்று புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, ஆக.,1 முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்.


latest tamil news



ஜார்க்கண்டில் பள்ளிகள், கல்லூரி, கல்வி நிறுவனங்கள், சினிமா அரங்குகள் மூடப்பட்டதோடு, மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள், ஜிம்கள், வரவேற்புரைகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பல பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர மற்ற பகுதிகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து மத்திய அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மாதத்திற்குள் 75 சதவீத நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதன்படி, ஜார்க்கண்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 10,399 ஆகவும், சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 6,120 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X