பொது செய்தி

இந்தியா

'2ஜி'யிலிருந்து முற்றிலும் வெளியே வர வேண்டும்: முகேஷ் அம்பானி

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
mukesh ambani, 2G Users, Mobiles, upgrade

மும்பை: இந்தியாவை முழுமையான டிஜிட்டல்மயமாக்க வேண்டுமெனில், 2ஜி தொழில்நுட்பத்தில் இருந்து, முற்றிலும் வெளியே வரவேண்டும் என, முகேஷ் அம்பானி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மொபைல் தொலைதொடர்பு அமைப்பின் 25வது ஆண்டுவிழாவையொட்டி, வீடியோ வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.


latest tamil news



வீடியோவில் அவர் கூறியதாவது: உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தில் கால்பதித்து இருக்கும் இச்சூழலில், இந்தியாவில் இன்றும் 30 கோடி மக்கள், 2ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு முழுமையான டிஜிட்டல் புரட்சி சென்று சேரவில்லை.

2ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் இந்தியர்கள் அனைவரையும், ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரவேண்டும். அப்போது தான் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் முழுமையடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy - Bangalore,இந்தியா
01-ஆக-202010:00:54 IST Report Abuse
Ganapathy அம்பணிஜி, மொபைல் போன் நிறுவனங்கள் கட்டவேண்டிய லைசென்ஸ் தொகையை, உச்ச நீதிமன்றம் தர சொன்னபோதும், தராமல் இழுத்துஅடிக்கின்ற நிறுவனங்களுக்கு, உங்கள் அறிவுறை கூறி அவர்களை உடனே கட்டச்சொல்லுங்கள். கடந்த பெப்ரவரி மாசத்தில் வந்த செய்தியை பார்த்தால் ஏறத்தாழ இருவடையராம் கோடி பாக்கி உள்ளது. இந்த கொரோன காலத்தில் தொலைக்காட்சிகளும், மொபைல் கம்பெனிகளும் நல்ல அறுவடை செய்துள்ளனர், இதை மொபைல் நிறுவனங்கள் உடன் செய்தல், நாட்டிற்கு நல்லது, ஒவொரு மாநில அரசும் விழிபிதுங்கி இருக்கின்றனர்
Rate this:
Cancel
நந்தகோபால் , நெல்லை,  in பெங்களூரு அய்யா சாமி முதல்ல இந்த BSNL க்கு 4G குடுங்க, அப்புறம் 2G ஆணில புடுங்கலாம், அப்புறம் உங்க 4G ஆனி 2G மாதிரி இருக்கு, அத முதல்ல சரி பண்ணுங்க , அப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணுங்க,
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
01-ஆக-202008:08:23 IST Report Abuse
பாமரன் என்னங்க இப்படி சொல்லிட்டீங்கோ....?? நாட்டில் உள்ள ""2ஜி"" க்காக (அம்பானிஜி அதானிஜி)... நாட்டை கையில் எடுத்திருக்கும் ""2ஜி"" ங்க (வேற யார்... நம்ம ஜியும் சேட்ஜியும்) உழையா உழைக்கும் போது நீங்க 2ஜி வாணாம்னு பொசுக்குன்னு சொல்லிட்டீங்க...??? எந்த ரெண்டு ஜி பற்றி சொல்றீங்க ஸாரே...??? (ஆனாலும் உங்ககிட்டே இந்த தொழில்நுட்பம் இல்லைன்னு நாட்டையே திருத்த நினைப்பது ஓவர்... எங்க ரங்கிடு இதுக்கு என்ன வெளக்கம் வச்சிருப்பாரு பார்ப்போம்....)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X