பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள அனுமதி : வழிகாட்டுதல் வழங்கிய மாவட்ட நிர்வாகம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

உடுமலை:சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை:பயிற்சிக்கு வரும் நபர்களிடம் உள்ளே நுழையும்பொழுது வெப்பமானி சோதனை செய்யப்படும்.
இதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். 15 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.தடகளம், ஹாக்கி, கைப்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, மேசை பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு, 2 மீட்டர் சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.டேக்வோண்டா, ஜுடோ, கபாடி, கராத்தே, குத்துச்சண்டை, ஊசூ, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில், உடற்பயிற்சிக்கு மட்டும் அனுமதி உள்ளது.குழு விளையாட்டில், தனிப்பட்ட விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொள்ள குறைந்த நபர்களுடன் சமூக இடைவெளியுடன் பயிற்சி அளிக்கப்படும். அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்.விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும், விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள், 'ஆரோக்கியசேது' செயலியை பயன்படுத்த வேண்டும்.பயிற்சி மேற்கொள்வதற்கு நுழைவு படிவத்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலிருந்து பெற்று சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும். உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல்குளம் செயல்பட தடை தொடர்கிறது.மேலும், விபரங்களுக்கு, திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை, 2244899, 9788647557, 8883873814 என்ற தொலைபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு, அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X