8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 15% வரை சரிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 15% வரை சரிவு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (5)
Share
Eight core industries, output contracts, June

புதுடில்லி: நாட்டின் 8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம், 15 சதவீதம் வரை சரிந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சில மாதங்களாகவே முக்கிய துறைகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இந்நிலையில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், உரம், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின், ஜூன் மாதத்திற்கான வளர்ச்சி விகிதங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


latest tamil news



இதில், உரத்துறையை தவிர மற்ற அனைத்து முக்கியத் துறைகளும் சரிவடைந்துள்ளன. ஜூன் மாதத்துக்கான வளர்ச்சி 15 சதவீதம் வரை குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 4வது மாதமாக முக்கியத் துறைகளின் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. ஏப்., முதல் ஜுன் மாதம் வரையிலான ஒட்டுமொத்த வளர்ச்சி, 24 சதவீதமாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X