சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கதறும் எடியூரப்பா!

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
 கதறும் எடியூரப்பா!

'சில மாதங்களுக்கு கூட நிம்மதியாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்க விட மாட்டார்கள் போலிருக்கிறதே' என, கண்ணீர் வடிக்கிறார், கர்நாடக முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா. கடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தள கட்சிகளை விட அதிக தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றபோதும், எடியூரப்பாவால், ஆறு நாட்கள் மட்டுமே முதல்வர் பதவியில் அமர முடிந்தது.

காங்கிரசும், மத சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து, பா.ஜ., ஆட்சியை கவிழ்த்தன. மத சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, முதல்வராக பதவியேற்றார். பெரும் சிரமங்கள், சட்டச் சிக்கல்களை கடந்து, ஒரு ஆண்டுக்குப் பின், எடியூரப்பா மீண்டும் முதல்வரானார். ஆனால், பதவியில் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

கர்நாடக, பா.ஜ., வில் அமைச்சர் பதவி கிடைக்காத மூத்த தலைவர்கள் பலர், எடியூரப்பாவை கவிழ்ப்பதற்கு பல ஆயுதங்களை கையில் எடுத்துள்ளனர். இதனால், அமைச்சரவையை மாற்றி விட்டு, மூத்த தலைவர்கள் சிலருக்கு வாய்ப்பு அளிக்க, எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். தற்போது அமைச்சராக இருக்கும் எல்லாருமே, 'எங்களை பதவியில் இருந்து துாக்கினால், நீங்கள் முதல்வராக நீடிக்க முடியாது' என, அவரை மறைமுகமாக மிரட்டுகின்றனர்.

எடியூரப்பாவோ, 'அடுத்த தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட மாட்டேன். தயவு செய்து, நிம்மதியாக ஆட்சி நடத்த விடுங்கள்' எனக் கதறுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X