பொது செய்தி

தமிழ்நாடு

120 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
 120 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களில், இரண்டாவது முறையாக, சோதனை ரயில், 120 கி.மீ., வேகத்தில் நேற்று முன்தினம் இயக்கப்பட்டது.கோவை - பொள்ளாச்சி; பொள்ளாச்சி - பாலக்காடு; பாலக்காடு - திண்டுக்கல் ரயில் வழித்தடங்களில் நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக அதிகவே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
கோவையில் இருந்து காலை, 8:00 மணிக்கு புறப்பட்ட சோதனை ஓட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சிறப்பு பெட்டியில், ரயில்வே பொறியாளர்கள் இடம் பெற்றிருந்தனர். போத்தனுார், கிணத்துக்கடவு வழியே, 120 கி.மீ., வேகத்துக்கும் குறையாமல் அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டு, தண்டவாளத்தின் அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டன.
பிறகு, பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு சென்ற சோதனை ஓட்ட ரயில், அதிர்வுகளை பதிவு செய்தவாறே திண்டுக்கல் சென்றது. மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது.முதல் முறை நடந்த சோதனை ஓட்டத்துக்கு பின், பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில், ரயில்களின் வேகக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, உச்சவேகம் அதிகரித்து அறிவிக்கப்பட்டது. இம்முறை, பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தில், வேகக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் என ரயில்வே ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X