பொது செய்தி

தமிழ்நாடு

மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் அளவீடு: நான்கு நெடுஞ்சாலைகள் இணைப்பு தீவிரம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
 மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் அளவீடு: நான்கு நெடுஞ்சாலைகள் இணைப்பு தீவிரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கான அளவீடு பணிகளை, அரசு துறைகள் இணைந்து துவங்கியுள்ளன.பொள்ளாச்சி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், நெடுஞ்சாலைகளை நகருக்கு வெளியே இணைக்கும் புறவழிச்சாலை திட்டம் பல ஆண்டுகளாக ஆலோசிக்கப்பட்டது.முதல்கட்டமாக, கோவை ரோடு - பல்லடம் ரோடு - தாராபுரம் ரோடு - உடுமலை ரோடு ஆகியவற்றை இணைக்கும் கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.குள்ளக்காபாளையம் பிரிவில் இருந்து, திப்பம்பட்டி வரை ஏற்கனவே உள்ள கிராமத்துக்கு ரோடுகளை அகலப்படுத்தி, தேவையான பகுதிகளில் நிலம் கையகப்படுத்தி இந்த ரோடு அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.அடுத்த கட்டமாக, மீன்கரை ரோடு - பாலக்காடு ரோடு - வடக்கிபாளையம் ரோடு - கோவை ரோடு ஆகியவற்றை கிராமங்கள் வழியே இணைக்கும் மேற்கு புறவழிச்சாலை திட்டம் துவங்கப்பட்டது.கடந்தாண்டு, இந்த புறவழிச்சாலைக்கான திட்ட வரைவு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டது. அரசு ஒப்புதல் கிடைத்ததும், நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகளின் நில உரிமையாளர்களிடம், இழப்பீடு குறித்து பேச்சு நடத்தப்பட்டது.தொடர்ந்து, ஜமீன் ஊத்துக்குளி - கிருஷ்ணா குளம் - தாளக்கரை - ஆர்.பொன்னாபுரம் வழியே உள்ள கிராம இணைப்பு ரோடுகளை, 16 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தி, ஒன்பது கி.மீ., தொலைவுக்கு ரோடு அமைக்கப்படுவதாகவும், நெடுஞ்சாலை துறை (திட்டம்) பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.அதையடுத்து, வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் இணைந்து, அளவீட்டு பணியை துவங்கியுள்ளனர்.இதில், புறவழிச்சாலை அமையவுள்ள பகுதிகளில் கையகப்படுத்தப்படும் நிலவும் எந்த வகையை சார்ந்தது என வகைப்படுத்துதல், வேளாண் பயிருக்கான இழப்பீடு கணக்கிடுதல், தனியார் நிலம், வீட்டு மனை, தரிசு நிலம் ஆகியவற்றுக்கு இழப்பீடு கணக்கிடுதல், புறம்போக்கு நிலம், அரசு கட்டடங்கள், நீர் நிலைகள் இருப்பின், அதற்குரிய துறைகளில் அனுமதி பெறுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தென்னைக்கு ரூ. 33,000!கையகப்படுத்தப்படும் வேளாண் நிலத்தில், தென்னை சாகுபடி செய்யப்பட்டிருந்தால், மரத்தின் வயதுக்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு தென்னைக்கு, 29 ஆயிரத்தில் இருந்து, 33 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X