ஐ.டி., அணியை வலுப்படுத்தும் அ.தி.மு.க.,| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஐ.டி., அணியை வலுப்படுத்தும் அ.தி.மு.க.,

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (1)
Share
''தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்தப் போறா ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''எந்த கட்சியில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தகவல் தொழில்நுட்பம், அரசியலுக்கும் பயன்படும்ன்னு நினைச்ச, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்திலேயே முதன்முதலாக, அ.தி.மு.க.,வில், ஐ.டி., அணியை உருவாக்கினார்... ''இது, 2014, 2016 தேர்தல்கள்ல, அக்கட்சி ஜெயிக்கிறதுக்கு
 ஐ.டி., அணியை வலுப்படுத்தும் அ.தி.மு.க.,

''தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்தப் போறா ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''எந்த கட்சியில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தகவல் தொழில்நுட்பம், அரசியலுக்கும் பயன்படும்ன்னு நினைச்ச, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்திலேயே முதன்முதலாக, அ.தி.மு.க.,வில், ஐ.டி., அணியை உருவாக்கினார்... ''இது, 2014, 2016 தேர்தல்கள்ல, அக்கட்சி ஜெயிக்கிறதுக்கு உதவித்துன்னு நினைக்கிறா ஓய்...

''தி.மு.க., இப்போது தான், ஐ.டி., அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கா... அவா, பல கோடி ரூபாய் கொடுத்து, 'ஐபேக்' நிறுவனம் மூலமா, அரசியல் பண்ண ஆரம்பிச்சுருக்கா ஓய்...''இப்போ, அ.தி.மு.க.,வுலையும், ஐ.டி., அணியை வலுப்படுத்தணுமுன்னு, மாவட்ட செயலர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு போட்டுருக்கார் ஓய்...

''அதையும், தன்னோட சொந்த மாவட்டத்துல தான், ஆரம்பிச்சிருக்கார்... சேலத்துல, நகராட்சிக்கு, 14 பேர்; ஊராட்சிக்கு ஒருத்தருன்னு, ஐ.டி., அணியில, 800க்கும் மேற்பட்டோரை நியமிச்சிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''இருபது மாசமாகியும், ஓய்வூதியம் கிடைக்காததால, ரொம்ப கஷ்டப்படுறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துல, ௨௦௧௮ நவம்பருல இருந்து, ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, இன்னும் ஓய்வூதியமே வழங்கலையாம் பா...''ஓய்வூதிய நிலுவைத் தொகை, 250 கோடி ரூபாயை, சீக்கிரம் கொடுத்துருவோமுன்னு, நிதி இயக்குனரும், மேலாண்மை இயக்குனரும், போன மாசம் உறுதி அளிச்சாங்க...

ஆனால், அது நடக்கலை பா...''இதுல, வேடிக்கை என்னான்னா, வாரியத்திற்கு வந்த நிதி முழுதும், ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டும் கொடுத்துருக்காங்களாம்... அதுக்கு காரணம், ஆட்சியாளர்களின் தலையீடு தான்; ஓய்வூதியம் கிடைக்காம, 20 மாசமா கஷ்டப்படுறோமுன்னு, ஓய்வூதியதாரர்கள் புலம்புறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''சத்துணவு ஊழியர்கள, எப்போ நியமிப்பாங்க...'' என்ற கேள்வியோடு, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''என்னன்னு விளக்கமா சொல்லுங்க வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''மதுரை மாவட்டத்துல, சத்துணவு அமைப்பாளர், சமையல்காரர், உதவியாளர் பணியிடங்கள், 400க்கும் மேல காலியாக இருக்குங்க... 2018ல, இந்த வேலைகளுக்கு, விண்ணப்பிக்கலாமுன்னு அறிவிப்பு வந்துச்சுங்க...''விண்ணப்பம் போட்டவங்கள அழைச்சு, கலெக்டர் அலுவலகத்துல, நேர்காணல் தேர்வும் நடந்துனாங்க... ஆனால், இதுவரை, யாரையும் நியமிக்கலைங்க...

''ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தரப்புல, ஆளாளுக்கொரு பட்டியலை, மாவட்ட நிர்வாகத்துக்கிட்ட கொடுத்துருக்காங்க... இதனால தான், யாருக்கும் வேலை கிடைக்கலையாம்... இந்த வேலைகளுக்கு தகுதியுள்ள, விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுருக்காங்க....

''மறுபக்கம், காலி பணியிடங்கள் அதிகமா இருக்குறதால, தற்போதுள்ள ஊழியர்களும், கூடுதல் பணி சுமையால் அவதிப்படுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X