பொது செய்தி

இந்தியா

6.43 லட்சம் பேருக்கு பரிசோதனை மீட்பு விகிதம் 64.54 ஆக உயர்வு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுடில்லி : கடந்த, 24 மணி நேரத்தில், 6.43 லட்சம் பேரிடம், கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை, 10.58 லட்சம் பேர் குணமடைந்துள்ளதால், பாதிப்பில் இருந்து மீண்டோர் விகிதம், 64.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறிய, நாடு முழுதும், தீவிர பரிசோதனை நடைபெற்று வருகிறது. கடந்த, 24 மணி நேரத்தில், 6.43 லட்சம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.இவர்களில், 55 ஆயிரத்து, 078 பேரிடம், வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இது, ஒரே நாளில் கண்டறியப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 16 லட்சத்து, 38 ஆயிரத்து, 870 ஆக உயர்ந்து உள்ளது.நாட்டில், 15 லட்சத்தை கடந்திருந்த பாதிப்பு எண்ணிக்கை, இரு நாட்களில், 16 லட்சத்தை கடந்துள்ளது. இவர்களில், 10.58 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மீட்பு விகிதம், 64.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மஹா.,வில், 266 பேர்; தமிழகத்தில், 97; கர்நாடகாவில், 83; ஆந்திராவில், 68; உ.பி.,யில், 57; மே.வங்கத்தில், 46; டில்லியில், 29; குஜராத்தில், 22 பேர் என, மொத்தம், 779 பேர், நேற்று இறந்துள்ளனர். இவர்களுடன், தொற்றால் பலியானோர் எண்ணிக்கை, 35 ஆயிரத்து, 747 ஆக அதிகரித்துள்ளது.இறப்பு எண்ணிக்கையிலும், 14 ஆயிரத்து, 728 பேருடன், மஹா., முதலிடத்தில் உள்ளது. டில்லி, 3,936 பேருடன் இரண்டாம் இடத்திலும், தமிழகம், 3,838 பேருடன், மூன்றாம் இடத்திலும் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து அவசியம்: சுகாதார அமைச்சகம்=கேரளாவில், ஜன., 30ல், முதல் நபரிடம் கொரோனா தொற்று உறுதியான நிலையில், நாடு முழுக்க, 110 நாட்களில், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை, 183 நாட்களில், 16 லட்சத்தை கடந்துள்ளது= நாட்டில், மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், ஜூலை மாதத்தில், ஒட்டுமொத்த பாதிப்பில், 60 சதவீதமும், இதுவரையிலான இறப்புகளில், 50 சதவீதமும் பதிவாகியுள்ளன= இதுவரை, 1.88 கோடி பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில், 8.57 சதவீதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்= மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியால் மட்டுமே, கொரோனாவை ஒழிக்க முடியும் என, தீர்மானிக்காமல், தடுப்பு மருந்தின் அவசியத்தை, நாடு உணர்ந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று முன்தினம் கூறியுள்ளது= நேற்றைய நிலவரப்படி, வைரஸ் பாதிப்பில், 4.12 லட்சம் பேருடன், மஹா., முதலிடத்திலும், 2.40 லட்சம் பேருடன், தமிழகம் இரண்டாம் இடத்திலும், 1.34 லட்சம் பேருடன், டில்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.= அசாமில், இதுவரை இல்லாத வகையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், 2,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை, 38 ஆயிரத்தை கடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X