பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி செல்லும் கல்லுாரி விண்ணப்பம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
 வீடு தேடி செல்லும் கல்லுாரி விண்ணப்பம்

வால்பாறை:வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், 'ஆன்லைன்' சேர்க்கைக்கு மாணவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் வழங்கப்பட்டது.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை 'ஆன்லைன்' முறையில் கடந்த, 20 தேதி முதல் நடக்கிறது.பெரும்பாலான எஸ்டேட்களில் 'நெட் ஒர்க்' பிரச்னையால் மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கல்லுாரி பேராசிரியர்கள் எஸ்டேட் பகுதிக்கு நேரடியாக சென்று, மாணவர்களை கல்லுாரியில் சேர விண்ணப்பத்தினை வழங்கி வருகின்றனர்.மேலும், மாணவர்களின் பெற்றோர்களிடமும் கல்லுாரியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முரளிதரன் கூறியதாவது:வால்பாறையில் இது வரை, 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது.விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை 'ஆன்லைன்' வாயிலாக இன்று (1ம் தேதி) முதல் பதிவேற்றம் செய்யலாம்.இது தொடர்பான சந்தேகங்களுக்கு, 63827 22613, 94864 11643, 94433 47026, 94424 34431, 94434 39367, என்ற, மொபைல்போன் எண்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X