சென்னை : பொதுப்பணி துறை சார்பில், 280.90 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள, 22 திட்டப் பணிகளுக்கு, முதல்வர் இ.பி.எஸ்.., நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, அடிக்கல் நாட்டினார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே, 33 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பணை கட்டப்பட உள்ளது. இந்த தடுப்பணை, 575 மீட்டர் நீளம், 1.50 மீட்டர் உயரம் உடையதாக அமைக்கப்பட உள்ளது. தடுப்பணையின் மேல்புறம், 1,500 மீட்டர்; கீழ்புறம், 500 மீட்டர் துாரத்திற்கு, இருபுறமும் வெள்ளத்தடுப்பு கரைகளும் அமைக்கப்பட உள்ளன. இந்த தடுப்பணையால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்; 2,௯12 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெறும். இது தவிர, 17 மாவட்டங்களில், 247.90 கோடி ரூபாய் மதிப்பிலான, 21 திட்டப் பணிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலர் சண்முகம், பொதுப்பணி துறை முதன்மை செயலர் மணிவாசன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE