பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 பொதுத்தேர்வு: உடுமலை அரசு பள்ளி சதம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வில், ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.பிளஸ் 1 வகுப்புத் தேர்வு, கடந்த இரண்டாண்டுகளாக பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. இத்தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் கணக்கிடப்படுவதில்லை.இருப்பினும், இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே, உயர்கல்விக்கு தகுதி பெற முடியும். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. உடுமலை கல்வி மாவட்டத்தில், ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளது.மற்ற பள்ளிகளில், ஜல்லிபட்டி -92, தேவனுார்புதுார் -85, அரசு ஆண்கள் மேல்நிலை -89, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலை -93, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி -92, உடுக்கம்பாளையம் -98, எலையமுத்துார் -84, குடிமங்கலம் -95, பூளவாடி -92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.மேலும், ராமசந்திராபுரம் -90, பெதப்பம்பட்டி - 96, மடத்துக்குளம் - 88, காரத்தொழுவு - 96, கொமரலிங்கம்- 84, எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி -98, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி.,மேல்நிலை -96, எஸ்.வி.ஜி.,மேல்நிலை -98, கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி -93, புங்கமுத்துார் காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி -93, பெரியவாளவாடி- 92 தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளன.உயர்கல்விக்கு தகுதி பெற, பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டதால், பள்ளிகளில் அதிக மதிப்பெண்களை விடவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X