பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் அம்பலமான பலவீனம் கிராமிய வங்கி நிறுவனர் யூனுஸ் தகவல்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுடில்லி : ''கொரோனா வைரஸ் பாதிப்பு, நம் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது,'' என, நோபல் பரிசு பெற்றவரும், கிராமிய வங்கி நிறுவனருமான முகமது யூனுஸ் கூறியுள்ளார்.

கிராம மக்களுக்கு சிறுகடன் திட்டத்தை துவக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவரும், கிராமிய வங்கியின் நிறுவனருமான முகமது யூனுஸ், 80, நம் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த, பொருளாதார நிபுணர்.'வீடியோ கான்பரன்ஸ்'இவருடன், காங்கிரஸ் எம்.பி., ராகுல், கொரோனா மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, முகமது யூனுஸ் கூறியதாவது:நிதி சார்ந்த ஒழுங்கமைப்பு தவறாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

நம் சமூகத்தின் பலவீனங்கள் என்ன என்பதை, இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, வெளிச்சம் போட்டு காட்டிஉள்ளது. எல்லா நாடுகளுமே புதிய அத்தியாயத்தை துவக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.பொருளாதாரத்தில், அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவற்றுக்கு போதிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, செல்வம் ஓரிடத்தில் குவியாமல் தடுப்பதற்கும், புவி வெப்பமயமாகாமல் தடுப்பதற்கும், வேலைவாய்ப்பின்மை இல்லாத சூழலை உருவாக்குவதற்கும், நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அதை முறையாக பயன்படுத்த வேண்டும். உறுதியான, துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், பெண்களுக்கும், சமூகத்தில் உரிய அங்கீகாரம் அவசியம். ஏழைகளை ஒதுக்காமல், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும். அவர்களுக்கு போதிய நிதி அளித்தால், வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவர். அமைப்பு சார்ந்த தொழில்களையும், தொழிலாளர்களையும் அங்கீகரிப்பது போல், அமைப்பு சாரா தொழிலாளர்களையும் அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் தான், பொருளாதாரத்தின் அடித்தளம். மேற்கத்திய பொருளாதாரத்தை, நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

அவர்கள், நகர்ப்புற பொருளாதாரத்தை, மையமாக வைத்து இயங்குகின்றனர். கிராமப்புற பொருளாதாரத்தை, தொழிலாளர்களை சப்ளை செய்யும் ஒரு துறையாக மட்டுமே கருதுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். யார் இவர்?முகமது யூனுஸ், வங்கதேசத்தில் ஏழை மக்களுக்காக கிராமிய வங்கி என்ற திட்டத்தை துவக்கி, சிறு, குறு கடன்களை வழங்கி வந்தார். வறுமையில் வாடும் மக்களின் முன்னேற்றத்துக்கு பெரும் உதவி செய்ததாக, இவருக்கு பாராட்டு குவிந்தது. நோபல் பரிசும் கிடைத்தது.

இந்த சிறு கடன் திட்டம், பல ஏழைகளை கடுமையான கடன் சுமைக்குள் தள்ளியதாக, முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கிராமிய வங்கி நிர்வாகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, வங்கதேச நீதிமன்றம், இவருக்கு ஒருமுறை கைது, 'வாரன்டு'ம் பிறப்பித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X