கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' சூதாட்ட விளம்பரம் கோலி, தமன்னாவுக்கு எதிராக வழக்கு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

சென்ன : இளைஞர்களை, 'ஆன்லைன்' சூதாட்டம் நோக்கி இழுக்கும் வகையில், விளம்பரங்களில் நடித்த, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னாவை கைது செய்யவும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு:அதிக பணம் தருவதாக ஆசை காட்டி, ஆன்லைன் சூதாட்டத்தை, சமூக விரோதிகள் ஊக்குவிக்கின்றனர். கிரிக்கெட் வீரர் விராட்கோலி, நடிகை தமன்னா ஆகியோரை விளம்பரங்களில் நடிக்க வைக்கின்றனர். தற்கொலைஇவர்களின் மூளை சலவையில், அப்பாவி இளைஞர்களும் கவரப்பட்டு, மாட்டிக் கொள்கின்றனர்.முதலில், சிறிது பணம் கிடைக்கிறது என்ற ஆசையில், கடைசியில், சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து விடுகின்றனர். பின், அதிக வட்டிக்கு கடன் வாங்கி, அதையும் இழக்கின்றனர். கடைசியில், பணத்தை திருப்பி தர முடியாமல், தற்கொலை செய்து கொள்கின்றனர்.சூதாட்டம் நடத்துபவர்கள், இளைஞர்களை வசப்படுத்த கிரிக்கெட் வீரர்களுக்கும், நடிகர், நடிகையருக்கும், கோடிக்கணக்கில் பணம் கொடுக்கின்றனர்.

சூதாட்டத்துக்கு அடிமையாகி, பணத்தை இழந்து உயிரையும் இழக்கின்றனர். அரசு அதிகாரிகளுக்கு இந்த சூதாட்ட விளையாட்டு பற்றி தெரிந்தும், அதை தடை செய்யாமல் உள்ளனர். ஆன்லைன் சூதாட்டம், 'புளுவேல்' விளையாட்டை விட ஆபத்தானது. எனவே, ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை உடனடியாக முடக்கவும், இளைஞர்களை துாண்டிவிடும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னாவை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

'டிவிஷன் பெஞ்ச்'மனுவை, அவசரமாக விசாரிக்க கோரி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், வழக்கறிஞர் சூரியபிரகாசம் சார்பில் முறையிடப்பட்டது. வரும், 4ம் தேதி, மனுவை விசாரணைக்கு எடுப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X