அமராவதி அணை பூங்கா மீட்கப்படுமா? மேம்பாட்டு நிதி கிடைக்காமல் அவலம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
 அமராவதி அணை பூங்கா மீட்கப்படுமா? மேம்பாட்டு நிதி கிடைக்காமல் அவலம்

உடுமலை;உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, வனத்துறையின் முதலைப்பண்ணை, மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை செய்யும், 'எக்கோ ஷாப்', வனப்பகுதி, அணைப்பூங்கா, படகு சவாரி என சுற்றுலா மையமாக உள்ளது.முன்பு, அணையின் கரைப்பகுதியில், 40 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பூங்கா அமைந்திருந்தது. செயற்கை நீரூற்றுக்கள், நடைபாதை, வண்ணச்செடிகள், பாரம்பரியமான மரங்கள், அவற்றின் வகைகள், இயல்புகள் குறித்த அறிவிப்பு பலகைகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் என, பூங்கா அமைந்திருந்தது.அணையின் எதிர்புறம், 10 ஏக்கர் பரப்பளவில், சிறுவர்களுக்கான விளையாட்டுப்பூங்கா, அரிய வகை பறவைகள், 18க்கும் மேற்பட்ட வன விலங்குகள், பாம்பு வகைகள் தனித்தனி அறைகளிலும், மான் ஆகியவற்றுடன் உயிரியல் பூங்காவும் இருந்தன.பூங்காவில், சிலைகள், செடி, கொடிகளால் ஆன செயற்கை கூடாரம் என, சுற்றுலாப்பயணிகளை கவரும் ஏராளமான அம்சங்கள் இருந்தன.அணைப்பூங்காவை பராமரிப்பதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் காட்டிய அலட்சியம் காரணமாக, பூங்கா முட்புதர்கள் முளைத்தும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உயிரியல் பூங்கா முழுவதும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது.பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுகள், அவற்றின் உபகரணங்கள் உடைந்தும், மின் விளக்குகள் திருடப்பட்டும், பரிதாப நிலையில் உள்ளது.பொதுப்பணித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பூங்கா பராமரிப்புக்காக, கருத்துரு தயாரித்து, நிதிக்காக அரசுக்கு அனுப்படுகிறது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. அணைப்பகுதியில், போதிய மழை பெய்யாததால், மரங்களும், செடிகளும் கருகும் அவல நிலை காணப்படுகிறது.தற்காலிகமாக, பூங்காவிலுள்ள மரம், செடிகளுக்கு நீருற்றி, பராமரிக்கும் பணியை மட்டுமாவது பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும். அரசு மேம்பாட்டு நிதி ஒதுக்கி, பூங்காவை மேம்படுத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X