பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் :தொலைபேசி எண் அறிவிப்பு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்து வந்தது.தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், இக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில், பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வருவதை தவிர்க்கும் வகையிலும், குறைகளை பிரதி வாரம் திங்கள் கிழமை அன்று தொலைபேசி மூலம் தெரிவிக்க, சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் தங்களது புகார்களை, இதற்கென துவக்கப்பட்டுள்ள, 0421 - 2969999 என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை, 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தெரிவிக்கலாம்.பொதுமக்களிடமிருந்து வரும் குறைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X