சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

ஆளுங்கட்சின்னா நோய் பரவாதா?

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஆளுங்கட்சின்னா நோய் பரவாதா?

மதுரையில், அ.தி.மு.க., நகர் மற்றும் புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். அவர்கள், மாவட்ட செயலரான, ராஜன் செல்லப்பாவை, அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

'கொரோனா' ஊரடங்கு விதியை மீறி, அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, 'கிழக்கு மாவட்டத்தில், அ.தி.மு.க., எழுச்சியாக இருப்பதற்கு, இந்த கூட்டமே சாட்சி. இந்த எழுச்சிக்கு, வீழ்ச்சியே கிடையாது' என்றார்.

அங்கிருந்த, மூத்த தொண்டர் ஒருவர், 'இந்த கூட்டத்துல, கொரோனா யாருக்கு இருக்குன்னு தெரியலையே... இதுல, எழுச்சின்னு பேச்சு வேற...' என்றார். அருகிலிருந்தவர், 'ஆளுங்கட்சின்னா, நோய் பரவாதாம்...' என்றார். மற்றவர்கள், 'குபீர்' சிரிப்பு சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஆக-202005:55:04 IST Report Abuse
D.Ambujavalli இத்தகைய அடங்கா நிலை அமைச்சர்களிடம் உள்ளவரை, எந்த ஊரடங்காலும் பயனில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X