பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
இதே நாளில் அன்று


ஆக., 1, 1920


மஹாராஷ்டிர மாநிலம் ரத்தினபுரியில், 1856 ஜூலை, 23ம் தேதி பிறந்தவர், பால கங்காதர திலகர். இளம் வயதிலேயே, பெற்றோரை இழந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களை, சிறையில் இருந்து மீட்பதற்காகவே, சட்டப்படிப்பில் சேர்ந்தார்.

அதன்படி, தேச பக்தர்கள் பலரை, சிறையில் இருந்து விடுவித்தார்.நண்பர்களுடன் இணைந்து, 'கேசரி, மராட்டா' ஆகிய பத்திரிகைகளை துவக்கினார். நம் கலாசாரத்துடன் இணைந்த கல்வியை வழங்க, தக்காண கல்வி சபையைத் துவக்கினார். இது, இசைக் கல்லுாரியாக வளர்ச்சியடைந்தது. 'சுதந்திரம், என் பிறப்புரிமை' என, முழங்கினார்.

மக்களிடம் ஒற்றுமை, நாட்டுப்பற்றை ஏற்படுத்த கணபதி உற்சவம், சத்ரபதி சிவாஜி உற்சவங்களைத் துவக்கி வைத்தார்.கடந்த, 1907-ல், நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், 'மிதவாதிகள்' என்றும்; திலகரின் தலைமையில், 'தீவிரப்போக்கு கொண்டோர்' என்றும், அக்கட்சியில் இரு பிரிவுகள் உருவாயின. உடல்நலம் பாதிக்கப்பட்டு, 1920 ஆக., 1ம் தேதி மரணமடைந்தார்.

இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை, பால கங்காதர திலகர் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X