பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த 'காயர் கிட்' உற்பத்தி! மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
இயற்கை விவசாயத்தை மேம்படுத்த 'காயர் கிட்' உற்பத்தி! மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்

பொள்ளாச்சி:இயற்கை விவசாயத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், குழந்தைகளுக்கான 'காயர் கிட்' தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு 'கிட்' வழங்கி பயிற்சி அளிக்க, தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், தென்னை சார்ந்த தொழில்கள் அதிகமுள்ளன. அதில், தென்னை நார் உற்பத்தி செய்து அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் விவசாயத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், குழந்தைகளுக்கான 'காயர் கிட்' தயாரித்துள்ளனர். இதனை கொண்டு பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவரும், கயிறு வாரிய உறுப்பினருமான கவுதமன் கூறியதாவது:விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். இன்றைய கால கட்டத்தில் உலகில் நடைபெறும், 70 சதவீதம் மண்ணில்லா விவசயமாக உள்ளது. அதில், ைஹட்ரா பானிக் சிஸ்டம் இருந்தாலும், கோகோ பித்தின் (நார் துகள்) பங்கு முக்கியமானதாகும்.வளர்ந்த மேலை நாடுகளில் விவசாயிகளுக்கு உதவ அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அங்கு, இரண்டாம் வகுப்பு முதல் கல்லுாரி வரையுள்ள மாணவர்களுக்கு நவீன மயமாக்கப்பட்ட புதிய விவசாய முறைகளை கற்றுத்தருகின்றனர்.
அதில், ஜப்பான், அமெரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, இத்தாலி உள்ளிட்ட, ஏழு நாடுகளிலும் குழந்தைகளுக்கு 'கோகோ பித்' மூலமாக 'காயர் கிட்' வழங்கப்படுகிறது.இதன் பயன்பாட்டால், 70 சதவீதம் நீர் சேமிப்பு, 60 சதவீதம் உரமும் சேமிக்கப்படுகிறது. அதே நேரத்தில், 40 சதவீதம் காய்கறி உற்பத்தி அதிகரிக்கும்.இதனை கருத்தில் கொண்டு, கயிறு வாரியம் உதவியுடன் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம், இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில், சங்கத்தின் வாயிலாக 'ஸ்டூடன்ட்ஸ் அக்ரி சயின்ஸ் கிட்' உருவாக்கப்பட்டு உள்ளது.இதற்கு முன் தயாரிக்கப்பட்ட பள்ளி குழந்தைகளுக்கான, 'காயர் கிட்'களில், 25 சதவீதம் பிளாஸ்டிக் இருந்தது. தற்போது, 100 சதவீதம் இயற்கையான தென்னை நார், நார் துகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், தென்னை நாரால் செய்யப்பட்ட டம்பளர், செறிவூட்டப்பட்ட நார் துகள், மூன்று விதமான விதைகள், உரமாக பஞ்சகவ்யமும், வேப்ப எண்ணெய் பூச்சி கொல்லியாகவும் பயன்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய இத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 12 விதமான காய்கறிகள் உற்பத்தி செய்ய கூடிய 'காயர் கிட்' தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றின் விலை, 250 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கொரோனா காலம் முடிவடைந்து பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதும் தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம் கயிறு வாரியம் உதவியுடன் பயிற்சிஅளிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X