பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளம் மூலம் போட்டித்தேர்வுக்கு பயிற்சி: இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

உடுமலை:டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் பாடக்குறிப்பு வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், கிராமப்புற மாணவர்கள் போட்டித்தேர்வினை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் இணையதளம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு, மே 15 முதல் நடந்து வருகிறது.
போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இணைய தளத்தில் நடத்தப்படும், காணொளி கற்றல் வகுப்பில் சேர்ந்து கொள்ள tiruppurstudycircle@gmail.com என்ற இ-மெயிலில் பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்புத்துறை மூலம், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, tamilnaducareerservice.gov.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இலவச பாடக்குறிப்புகள், பாடத்திட்டங்கள், பாடநுால்கள், வினாத்தாள்கள் மற்றும் தங்களுடைய கற்றல்திறன் பரிசோதனை செய்வதற்கு மாதிரித்தேர்வுகள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X