எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

குஷ்பு விவகாரத்தால் காங்கிரசில் கொந்தளிப்பு; விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப டில்லி முடிவு

Updated : ஆக 01, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
Congress, Kushboo, NEP 2020

காங்கிரஸ் தலைமை விஷயத்தில், ராகுலுக்கு எதிராகவும், மத்திய பா.ஜ., அரசின், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளதால், காங்கிரசில் அவருக்கு எதிராக கொந்தளிக்க துவங்கி உள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்த விவகாரத்தில், நடிகை குஷ்புவிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. குஷ்புவின் கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானாவும் பதிலடி கொடுத்துள்ளதால், குஷ்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை - 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வகிக்கிற நடிகை குஷ்பு, 'மத்திய அரசின், புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறேன்' என, கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் கொள்கை, நிலைப்பாட்டுக்கு எதிராக, குஷ்பு தெரிவித்த கருத்து, தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.


'ரோபோ' அல்ல'

டுவிட்டர்' பக்கத்தில், குஷ்பு கூறியிருப்பதாவது: என் நிலைப்பாட்டில் இருந்து, காங்கிரஸ் வேறுபடுவதற்காக, ராகுலிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் தலையை ஆட்டும், 'ரோபோ' அல்ல; கைப்பாவையும் அல்ல. உண்மையை தான் பேசுகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதில், குஷ்பு உறுதியாக உள்ளார். அவரது கருத்துக்கு பதிலடி தரும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியதாவது: காங்கிரஸ், கருத்து சுதந்திரம் உள்ள கட்சி. எந்த ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தையும் விவாதிக்க முடியும். கட்சி அமைப்புக்குள் பேசினால், அதற்கு வரவேற்பு உண்டு. பொதுவெளியில் பேசினால், அது, அரசியல் முதிர்ச்சியற்றது. விரக்தியில் இருப்பவருக்கு, யோகா சிறந்த மருந்து. அவர், ஏதோ லாபம் எதிர்பார்த்து பேசியுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா கூறுகையில், ''சமீப காலமாக, காங்கிரஸ் கட்சி பற்றி, சமூக வலைதளங்களில், குஷ்பு அவதுாறு பரப்பி வருகிறார். புதிய கல்விக் கொள்கையில், சொந்த கருத்தாக, குஷ்பு பேசியது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''பொறுப்பான பதவியில், குஷ்பு இருக்கிறார். தன் சொந்த கருத்து என தெரிவித்திருப்பது துரதிருஷ்டவசமானது. ''அவரை யாரும், ரோபோவாக இருக்க சொல்லவில்லை. கட்சி கொள்கைக்கு எதிரான கருத்து சொல்லாமல் இருந்தால் போதும்,'' என்றார்.

புதிய கல்விக் கொள்கைக்கு, குஷ்பு ஆதரவு தெரிவித்த விவகாரம், காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குஷ்புவிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.


காங்.,கில் தொடர்வேன்!

''நான் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன்,'' என, நடிகை குஷ்பு கூறியுள்ளார்.காங்., தலைமை விஷயத்தில், ராகுலுக்கு எதிராகவும், மத்திய பா.ஜ., அரசின் கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அதனால், அவர் பா.ஜ.,வில் சேருவார் என, தகவல் வெளியானது. இது குறித்து குஷ்பு கூறுகையில், ''நான் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன். பா.ஜ.,வில், நான் சேரப் போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-202000:26:04 IST Report Abuse
Ramesh R இவருக்கு எங்கும் தங்க முடியாது - கற்புக்கரசி அல்லவா
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-ஆக-202023:45:52 IST Report Abuse
sankaseshan ஆனாலும் பச்சையப்பனுக்கு ரொம்ப பேராசை அடுத்த தேர்தலுக்கு கட்சி இருக்குமா தெரியலை .
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
01-ஆக-202013:16:34 IST Report Abuse
Sridhar பணம் வாங்கியபிறகு சொந்த அபிப்ராயங்களை வெளியே சொல்லக்கூடாது. காங் இவரை உடனடியாக செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X