அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவுத்துறை கட்டடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

சென்னை : வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங் களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.

சென்னை, அம்பத்துார், கொன்னுார், சுங்குவார்சத்திரம், கடையநல்லுார், ராதாபுரம், தாமரைப் பட்டி ஆகிய இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள். திருப்பூரில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம், சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலக இணைப்பு கட்டடம், பாலக்கோடு வணிகவரி அலுவலக கட்டடம் ஆகியவை, 12.57 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளன.இக்கட்டடங்களை, நேற்று வீடியோ கான்பரன்ஸ் வழியாக, முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார். பணி நியமன ஆணை பதிவுத்துறையில், 143 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு அடையாளமாக, ஐந்து பேருக்கு, பணி நியமன ஆணைகளை, நேற்று முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், வணிகவரி துறை அமைச்சர் வீரமணி, தலைமை செயலர் சண்முகம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் பீலா ராஜேஷ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X