பல்கலை இறுதியாண்டு தேர்வு ரத்தா? பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுடில்லி : பல்கலை மற்றும் கல்லுாரிகளில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுதும் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளில், வரும் செப்டம்பருக்குள் இறுதியாண்டு தேர்வை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை எதிர்த்து, 31 மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டதாவது:இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை. பெரும்பாலான பல்கலை மற்றும் கல்லுாரிகள், தேர்வை நடத்த தயாராக உள்ளன. மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளன; இதை ஏற்க முடியாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, யு.ஜி.சி., மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:இறுதியாண்டு தேர்வு பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம். நாடு முழுதும், 209 பல்கலைகளில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. மேலும், 390 பல்கலைகள், தேர்வு நடத்த தயாராக உள்ளன.இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருவதால், இறுதியாண்டு தேர்வுக்கு, நீதிமன்றம் தடை விதித்து விடும் என, யாரும் நினைத்து விடக் கூடாது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

அப்போது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'அசாம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 'இத்துடன், நாடு முழுதும் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. எனவே, இறுதியாண்டு தேர்வை நடத்த தடை விதிக்க வேண்டும்' என்றனர்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க விரும்பவில்லை. மஹாராஷ்டிரா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்தும் பரிசீலிக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்து தரப்பினரும், தங்கள் பதிலை, வரும், 7ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும், 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X