குழியில் சிக்கிய லாரியால் நெரிசல்:பாதாள சாக்கடை பணியால் அவதி

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
 குழியில் சிக்கிய லாரியால் நெரிசல்:பாதாள சாக்கடை பணியால் அவதி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில், பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தில், ஆள் இறங்கும் குழிகள், குழாய் பதிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.தோண்டப்படும் ரோடுகள் முறையாக மூடப்படாததால், விபத்துகள் ஏற்படுகிறது. மார்க்கெட் ரோட்டில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்றன. இப்பணிகள் முடிந்ததும் வழக்கம் போல ரோட்டை மண் கொட்டி பெயரளவுக்கு மூடிச் சென்றனர்.இந்நிலையில், நேற்று மதியம் அவ்வழியாக சரக்கு ஏற்றி வந்த லாரி, முறையாக மூடப்படாத குழியில் சிக்கியது. கிரேன் உதவியுடன் வாகனத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.குழியில் லாரி சிக்கியதால், அவ்வழியாக வந்த வாகனங்கள் வரிசையாக நின்றதால், கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், குழியில் இருந்து லாரி மீட்கப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்படும் குழியில் வாகனங்கள் சிக்குவது; போக்குவரத்து நெரிசல் என தொடர்கதையாக உள்ளது. எனவே, ரோட்டில் தோண்டிய குழிகளை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X