சம்பவம் செய்தி

தமிழ்நாடு

65 பேரில் 35 பேர் 'டிஸ்சார்ஜ்': உடுமலையில் 5 பகுதிகளுக்கு 'சீல்'

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
 65 பேரில் 35 பேர் 'டிஸ்சார்ஜ்': உடுமலையில் 5 பகுதிகளுக்கு 'சீல்'

உடுமலை;உடுமலையில், கொரோனா தொற்று பாதித்த, 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.உடுமலை, ராமசாமி நகரை சேர்ந்த, 42 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், உடுமலை போலீஸ் ஸ்டேஷன், ஊர்க்காவல் படையிலும், நகராட்சி கொசு ஒழிப்பு பணியாளராகவும் உள்ளார்.இதனையடுத்து, ராமசாமி நகர் பகுதியில், நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிரதான ரோடு கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்து, அடைக்கப்பட்டது.மேலும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும், எஸ்.வி.,புரத்தை சேர்ந்த, 50 வயது பெண், ஜீவா நகரை சேர்ந்த, 35 வயது ஆண் ஆகிய இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.அதோடு, வட பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்த, 70 வயது பெண், சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்த, 43 வயது ஆண் என, உடுமலை நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில், ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், உடுமலை அரசு மருத்துவமனை சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வட்டார சுகாதாரத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பில், தொற்று பாதித்த பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. அருகில் வசிப்பவர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்கு, கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.உடுமலை நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில், நேற்று வரை, 65 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதில், 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இருவர் உயிரிழந்துள்ளனர். 28 பேர், உடுமலை அரசு மருத்துவமனை, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மடத்துக்குளம் பகுதியில், தற்போது பத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதித்து சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில் மடத்துக்குளம் அருகே 56 வயதுடைய குமரலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு நோய்த்தோற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேரூராட்சி அலுவலகம் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை விடப்பட்டு, பூட்டப்பட்டது.அவருடன் பணியாற்றிய ஊழியர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X