பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கூண்டில் இருந்து யானைக்கு 8 மாத பயிற்சி நிறைவு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
 மரக்கூண்டில் இருந்து  யானைக்கு 8 மாத பயிற்சி நிறைவு

ஆனைமலை;பொள்ளாச்சி அடுத்த, டாப்சிலிப் வரகளியாறில், மரக்கூண்டில் பயிற்சியளிக்கப்பட்ட 'முத்து' யானை, கூண்டில் இருந்து வெளியில் அழைத்து வரப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த அர்த்தநாரிபாளையம் பகுதியில் கடந்தாண்டு, மே மாதம், இந்த யானை தாக்கியதில் நவமலையில் சிறுமி மற்றும் முதியவர் இறந்தனர்.நவ., 9ம் தேதி விளைநிலத்துக்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதில், விவசாயி ராதாகிருஷ்ணன், 55, இறந்தார். அதே பகுதியை சேர்ந்த திருமாத்தாள், 50, யானை தாக்கி காயமடைந்தார்.இதையடுத்து, மயக்க ஊசி செலுத்தி நவ., 14ம் தேதி யானை பிடிக்கப்பட்டு, டாப்சிலிப் வரகளியாறு அழைத்து சென்று, மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. 19 வயதான அந்த யானைக்கு வனத்துறையினர், 'முத்து' எனப்பெயரிட்டு, எட்டு மாதங்களாக பயிற்சியளித்தனர். இந்நிலையில், 'முத்து' மற்ற முகாம் யானைகளைப் போன்று, கட்டளைகளை கேட்டு நடப்பதால், மரக்கூண்டில் இருந்து வெளியே அழைத்துவர திட்டமிட்டனர்.ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் மேற்பார்வையில், புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர் சக்திவேல் தலைமையில், 'முத்து' யானை நேற்று வெளியே அழைத்துவரப்பட்டது.வனக்கால்நடை டாக்டர் சுகுமார் தலைமையிலான மருத்துவக்குழு யானையை தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு, யானைக்கு பயிற்சியளித்து கோழிகமுத்தி முகாமுக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளனர்.ஐந்து யானைகள் காவல்!புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் செல்வம் கூறியதாவது:260 நாட்கள் பயிற்சிக்கு பின், 'முத்து' யானை, மரக்கூண்டில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டுள்ளது. வனத்துறை பணியாளர்கள், பாகன்களின் தீவிர முயற்சியால், யானையின் ஆக்ரோஷம் குறைந்து, சாதுவாக மாறியுள்ளது. முகாம் யானைகளைப்போன்று பாகன்களின் கட்டளையை ஏற்று பணிந்து அமைதியாக உள்ளது.இன்னும் சில நாட்களுக்கு மரக்கூண்டுக்கு வெளியில் வைத்து பயிற்சி அளிக்கப்படும். மற்ற யானைகளுடன் சண்டையிடாமல், முகாமில் அவற்றுடன் வாழ பழகுவதற்காக, மாரியப்பன், செல்வி, தமிழன் உள்பட ஐந்து யானைகள் உள்ளன. விரைவில் அனைத்து பயிற்சியும் முடித்தவுடன், 'முத்து' கோழிகமுத்தி முகாமுக்கு அழைத்துவரப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X