பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், நிவாரணம் பெறாத மாற்றுத்திறனாளிகள் பெற்றுக்கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தலா ஆயிரம் ரூபாய், அவர்கள் வீடுகளுக்கு சென்று அரசு வழங்குகிறது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள, மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்து, நகலினை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர்களிடம் வழங்கி, நிவாரணத் தொகை, ரூ.1000 பெற்றுக்கொள்ளலாம். வினியோகப்படிவத்தில், பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்ளை மாற்றுத்திறனாளிகள் அளிக்க வேண்டும்.நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் இருந்தால், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அலைபேசி எண்,- 85081 05395 ; அலுவலக தொலைபேசி எண் -0421- -2791165 தெரிவிக்கலாம்.பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள், வாட்ஸ் ஆப் மற்றும் வீடியோகாலிங் எண் 97007 99993 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.நிவாரணத் தொகையினை மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் அல்லது சிறப்பு சூழ்நிலையில் பாதுகாவலர்களிடம் மட்டுமே வழங்கப்படும்.நிவாரணத்தினை பெறாத மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் உரிய ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X