பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலையணிவிப்பு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; தொரவளூரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் தம்பிதுரை மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க., விருத்தா சலம் தெற்கு ஒன்றிய செயலாளராக, கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த தம்பிதுரை நியமிக்கப்பட்டார். கடலுார் மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழி தேவன், கலைச்செல்வன் எம்.எல்.ஏ., ஆகியோரிடம் ஆசி பெற்றார்.பின்னர், விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலையணிவித்தார். விருத்தாசலம் ஒன்றிய சேர்மன் செல்ல துரை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் தங்கதுரை, கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி செயலாளர் ஆனந்த குமார், ராஜ புகழேந்தி, மாவட்ட பிரதிநிதி குணா ராமு, மாவட்ட கவுன்சிலர் ராஜேஸ்வரி சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் தனம் சிவலிங்கம், கூட்டமைப்புத் தலைவர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜேந்திரன், மணி, பரவளூர் ஊராட்சி தலைவர் பூமாலை, பாலு, மதியழகன், சண்முகம், சிவாமணி, இளங்கோவன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பின், ஒன்றிய செயலாளர் தம்பிதுரை, ஒவ்வொரு கிராமமாக சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X