சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோப்பினுள் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
 தோப்பினுள் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

ஆனைமலை:கோட்டூர் அடுத்த நா.மூ.சுங்கம் அருகே, தனியார் வாழை தோப்பில் மலைப்பாம்பு இருப்பதாக, வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த, வேட்டைத்தடுப்பு காவலர்கள், வாழை மரத்தை சுற்றி படுத்திருந்த, எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டனர்.அதன்பின், அங்கலக்குறிச்சி கோபால்சுவாமி கோவில் மலையடிவாரத்துக்கு சென்று, மலைப்பாம்பை வனத்தினுள் விடுவித்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'மழைக்காலம் என்பதால், மலைப்பகுதிகளில் இருந்து மலைப்பாம்பு அடித்துவரப்பட்டு, வனத்தை ஒட்டிய பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. மக்கள், விவசாயிகள் மலைப்பாம்பு உள்ளிட்ட பாம்புகளை கண்டால், அவற்றை துன்புறுத்தாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X